ஈராக்: தொடர் கார் குண்டுவெடிப்புகளில் சிக்கி 39 பேர் பலி, 120 பேர் படுகாயம்
பாக்தாத்: ஈராக்கில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
ஈராக்கின் ஷைட் மாவட்டத்துக்கு உட்பட்ட பயா பகுதியில் நேற்று ஒர்க்ஷாப் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு திடீரென வெடித்ததில், 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதேபோல், ஷன்னி மாவட்டம் லாஜி என்ற இடத்தில் மற்றொரு ஒர்க்ஷாப்பில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி 3 பேர் பலியானார்கள், 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து, மத்திய பாக்தாத் அருகே மக்கள் நெருக்கடி மிகுந்த இடத்தில் கார் குண்டு வெடித்ததில் 5 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஈராக்கில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 30 பேர் பலியானார்கள். 123 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்தநிலையில், குண்டுவெடிப்புகளில் சிக்கி மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 9 பேர் உயிரிழந்த காரணத்தால், தற்போது பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications