திடீரென கிளம்பிய புகை! அப்படியே இரண்டாக பிளந்த விமானம்.. பதற வைக்கும் விமான விபத்து! பகீர் வீடியோ
சேன் ஜோஸ்: கோஸ்டாரிகாவில் அவசரமாகத் தரையிறங்கும் போது சரக்கு விமானம் ஒன்று அப்படியே இரண்டாகப் பிளந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கோஸ்டாரிகா. குட்டி நாடான கோஸ்டாரிகா பெரும்பாலும் சுற்றுலாத் துறையை நம்பியே உள்ளது.
இந்நிலையில், கோஸ்டாரிகாவில் சரக்கு விமானம் ஒன்று தரையிறங்கும்போது அப்படியே இரண்டாகப் பிளந்துள்ளது.

விமான விபத்து
கடந்த வியாழக்கிழமை கோஸ்டாரிகாவில் டிஎச்எல் நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் அவசரமாகத் தரையிறங்கியது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அந்த விமானம் விபத்திற்குள்ளானதில், அது இரண்டாகப் பிளந்தது. இந்தத் திடீர் விபத்து காரணமாக கோஸ்டாரிக்காவில் உள்ள சான் ஜோஸில் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. விமானம் தரையிறங்கிய போது, டிஹெச்எல்லின் விமானத்தில் இருந்து திடீரென புகை கிளம்பியது. பின்னர், அப்படியே விமானம் இரண்டாக உடைந்து நின்றது. இது தொடர்பான ஃபோட்டா மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

யாருக்கும் காயம் இல்லை
இந்த விபத்து ஏற்படும் போது, விமானத்தில் 2 பேர் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இருவரும் நல்ல நிலையில் உள்ளதாக கோஸ்டாரிகா தீயணைப்பு வீரர்களின் தலைவர் ஹெக்டர் சாவ்ஸ் தெரிவித்தார். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விமான விபத்திற்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இது குறித்த விசாரணையை உள்ளூர் அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

நடந்தது என்ன
இந்த எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து காரணமாக விமானி அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் இருப்பினும், அவரது உடல்நிலையும் கூட சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர், மேலும் விபத்து ஏற்பட்ட போது நடந்த அனைத்தும் அவருக்குத் தெளிவாக ஞாபகம் உள்ளதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டனர். கோஸ்டாரிக்கா தலைநகர் சான் ஜோஸுக்கு வெளியே உள்ள ஜுவான் சாண்டாமரியா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட போயிங்-757 விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

திடீர் விபத்து
இதையடுத்து புறப்பட்ட 25 நிமிடங்களில் அந்த விமானம் அவசரமாகத் தரையிறங்க மீண்டும் திரும்பி உள்ளது. அதன்படி காலை 10:30 மணிக்கு (1630 GMT) விமானம் மீண்டும் தரையிறங்க முயன்றுள்ளது. அப்போது தான் இந்த விபத்து ஏற்பட்டது. ஹைட்ராலிக் பிரச்சனை காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக விமான நிலையம் மாலை 6 மணி வரை மூடப்பட்டது.


Click it and Unblock the Notifications
