“கூகுள் ஊழியர்களின் சாதி வெறி.. குறி வைத்து அட்டாக் பண்ணாங்க” - தேன்மொழி சௌந்தரராஜன் காட்டம்!
கலிஃபோர்னியா : அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தில் தலித் மக்களின் உரிமைகளுக்காகச் செயல்படும் தேன்மொழி சௌந்தரராஜன் பங்கேற்கும் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கு கூகுள் நிறுவன ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தேன்மொழி சௌந்தரராஜன் உரை ரத்து செய்யப்பட்டது. இந்த கருந்தரங்கை ஏற்பாடு செய்த கூகுள் நியூஸ் திட்ட மேலாளர் தனுஜா குப்தா ராஜினாமா செய்தார்.
இந்த விவகாரம் கூகுள் நிறுவனத்தில் சாதிய பாகுபாடு நிலவுவதை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளதாக பேட்டி ஒன்றில் தேன்மொழி சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தேன்மொழி சௌந்தரராஜன்
கூகுள் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சாதிய பாகுபாடு குறித்த ஓர் உரையை பலத்த எதிர்ப்பால் கூகுள் நிறுவனம் ரத்து செய்தது. அமெரிக்காவில் தலித் உரிமைகளுக்காகப் போராடும் ஈக்வாலிடி லேப்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர் தேன்மொழி சௌந்தரராஜன் இந்த உரையை நிகழ்த்துவதாக இருந்தது. ஆனால், கூகுள் நிறுவன ஊழியர்களின் எதிர்ப்பால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

ஏன் தடை
தலித் செயற்பாட்டாளர் தேன்மொழி சௌந்தரராஜன் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக வெறுப்பு பரப்புரையில் ஈடுபடுபவர் என்றும் அவர் பங்கேற்கும் கருத்தரங்கு கூகுள் நிறுவன ஊழியர்கள் இடையே சாதிய பாகுபாட்டை ஏற்படுத்தும் என கூகுள் நிறுவன ஊழியர்கள் தலைமைக்கு மின்னஞ்சல் செய்ததால் தேன்மொழி சௌந்தரராஜன் பங்கேற்க இருந்த கருத்தரங்கிற்கு தடை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

சுந்தர் பிச்சைக்கு கடிதம்
இந்த விவகாரம் தொடர்பாக கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையிடமும் தலித் செயற்பாட்டாளர் தேன்மொழி சௌந்தரராஜன் முறையிட்டுள்ளார். சுந்தர் பிச்சைக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், "நீங்களும் நானும் தமிழர்கள். நீங்கள் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர், நான் தலித் குடும்பத்தைச் சார்ந்தவள். நம் ஊரில், என்னைப் போன்ற தலித் மக்கள் கொடூரமான வன்முறையை எதிர்கொள்கிறார்கள். சாதி அடுக்குகளில் மேலே உள்ள சமூகத்தைச் சேர்ந்த ஒருவராக, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண சரியானதைச் செய்யும் நிலை இப்போது உங்களுடையது" எனச் சுட்டிக்காட்டி உள்ளார்.

தனுஜா குப்தா
ஆனால், சுந்தர் பிச்சை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவரும், கூகுள் நியூஸ் பிரிவில் திட்ட மேலாளராகப் பணியாற்றியவருமான தனுஜா குப்தா ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும், சாதியப் பாகுபாட்டால் மட்டுமே ராஜினாமா செய்திருக்கிறேன் என்றும் ஊழியர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

கூகுள் கருத்தரங்கு
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நியூஸ் மினிட் செய்தித் தளத்துக்கு பேட்டியளித்துள்ள தலித் செயற்பாட்டாளர் தேன்மொழி சௌந்தரராஜன், "கூகுள் நிறுவனத்தில் அந்த கருத்தரங்கு நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு ஒரு குழுவினர் சாதி ரீதியான பிரச்சாரத்தைத் தொடங்கி, நான் உரையாற்றுவதற்கு எதிராக கூகுள் நிறுவனத்திற்கு பொய்யான புகார்களை அனுப்பினர். அதில் பலவும் மிகவும் இழிவானவை." எனத் தெரிவித்துள்ளார்.

குறிவைத்து அட்டாக்
மேலும், "என்னை கூகுள் கருத்தரங்கிற்கு பேச ஏற்பாடு செய்தவர்களும், அந்நிறுவனத்தில் உள்ள சாதி வெறியர்களால் குறிவைத்து தாக்கப்பட்டனர். நான் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவரின் பெயர் மற்றும் மின்னஞ்சலுடன் அழைப்பிதழை வேண்டுமென்றே கசியவிட்டனர். இது வெறும் சாதிய பாகுபாடு பிரச்சனை மட்டுமல்ல. பணியிட பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது தொடர்பானதும் கூட" எனத் தெரிவித்துள்ளார்.

சாதிய சிக்கல்
தொடர்ந்து, "கூகுள் நிறுவனத்தின் எதிர்வினையின் ஒவ்வொரு பகுதியும் சாதிய சமத்துவம் அங்கு அவசியம் என்பதை பிரதிபலிக்கிறது. கூகுளில் மிக உயர்ந்த தலைமைப் பதவிகளில் இருப்பவர்களுக்கு சாதி என்றால் என்ன, இந்த பிரச்சினையைப் பற்றி எப்படி பேசுவது என்பது பற்றி முடிவெடுக்க யார் மேசையில் இருக்க வேண்டும் என்று புரியவில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சாதிவெறி தான் பிரச்சனை
"கூகுள் நிறுவனத்தில் எனது பேச்சு எந்த பிளவுபடுத்தும் காரியத்தையும் செய்திருக்க முடியாது. ஏனெனில் அந்த நிறுவனம் ஏற்கனவே இந்த சாதி ரீதியாக பிளவுபட்டுள்ளது. பணியிடங்களில் சாதிவெறியின் தாக்கங்கள் உணரப்படுகின்றன. எனவே சாதி பற்றிய பேச்சு பிரச்சனை இல்லை, சாதிவெறி தான் பிரச்சனை. மேலும் இந்த பிரச்சனையை நாம் தைரியத்துடன் தான் தீர்க்க முடியும். அதற்காகவாவது கூகுள் நான் பேசுவதற்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும்" என தேன்மொழி சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications