ரூ 60 லட்சத்திற்கு கன்னித்தன்மையை ஏலம் விடும் பிரேசில் மாணவி
பிரசிலியா: பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது கன்னித்தன்மையை ரூ 60 லட்சத்திற்கு ஏலம் விடப் போவதாகவும், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் இணையத்தில் விளம்பரம் செய்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
பிரேஸில் நாட்டை சேர்ந்த 21 வயது மாணவி கேத்தரினா மிக்லிஒரினி. இவர் ஏற்கனவே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது கன்னித்தன்மையை விலைபேசி ஆன்லைன் மூலம் ஏலம் விட்டார். அப்போது பலநாடுகளைச் சேர்ந்த பலர் அந்த ஏலத்தில் பங்கெடுத்த போதும், ஜப்பான் நாட்டை சேர்ந்த நட்சு,அமெரிக்காவை சேர்ந்த ஜேக்மில்லர். ஜேக் ரை மற்றும் இந்தியாவை சேந்ரத் ருத்ரா ஜட்ட்ர்ஜி ஆகியோரிடையே ஏலம் கேட்பதில் கடும் போட்டி நிலவியது.
கடைசியாக, 2 லட்சம் பவுண்டுகள் பேரத்தில் நட்சு வெற்றி பெற்றார். ஆனால் காரணம் தெரிவிக்கப்படாமல் அந்த ஒப்பந்தம் முறிந்து போனதாக அறிவித்தார் கேத்தரினா. இந்நிலையில், தற்போது மீண்டும் தனது கன்னித்தன்மையை ஏலம் விட முடிவெடுத்துள்ளாராம் கேத்தரினா.
ஏலத்திற்கான குறைந்த பட்சத் தொகையாக ரூ 60 லட்சம் கோரி இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார் இம்மாணவி. மேலும், எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி ஆண், பெண் என யார் வேண்டுமானாலும் இந்த ஏலத்தில் பங்கெடுக்கலாம் என அவர் அறிவித்துள்ளார்.
இம்முறை, ஒரு கோடி ரூபாய் வரை ஏலம் கேட்பார்கள் என கேத்தரினா நம்பிக்கைத் தெரிவித்துள்ள கேத்தரினா, ஏலத்திற்கான கடைசித் தேதியாக டிசம்பர் 12ஐ குறிப்பிட்டுள்ளார்..












Click it and Unblock the Notifications