"பேரழிவு வரும்.. ஜாக்கிரதை".. மேற்கு உலக நாடுகளுக்கு புடின் அனுப்பிய மெசேஜ்! ரஷ்யா பரபரப்பு வார்னிங்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: மிகப்பெரிய பேரழிவு வரும், மேற்கு உலக நாடுகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    Russia இந்தியாவின் True Friend என நிரூபித்த 4 தருணங்கள் | India Russia Friendship | Oneindia Tamil

    ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் உச்சம் தொட்டுள்ளது. ரஷ்ய படைகள் தற்போது உக்ரைன் தலைநகர் கீவிற்கு வெளியே 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு வரிசை கட்டி நிற்கிறது. 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு இங்கு பீரங்கிகள் வரிசையாக நிற்கின்றன.

    இந்த பீரங்கிகள் எல்லாம் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தி உக்ரைன் மீது பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் ரஷ்யாவின் பிளான் அதுவாகவே இருக்கும் என்று கூறுகிறார்கள்.

    போர் நிறுத்தம்

    போர் நிறுத்தம்

    இந்த நிலையில் உக்ரைனில் சில மணி நேரங்கள் போர் நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது. அங்கிருக்கும் மக்களை வெளியேற்றும் விதமாக போர் நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ரஷ்யா இதற்கு ஒப்புக்கொண்ட நிலையில் இந்த போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. ஆனால் போர் நிறுத்தத்திற்கு இடையில் சில பகுதிகளில் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் மக்களை மீட்க முடியவில்லை என்றும் உக்ரைன் அரசு புகார் வைத்தது குறிப்பிடத்தக்கது.

    மீண்டும் தொடங்கிய போர்

    மீண்டும் தொடங்கிய போர்

    இந்த நிலையில்தான் இன்றும் மீண்டும் உக்ரைனில் போர் தொடங்கி உள்ளது. கார்கிவ் பகுதியில் உக்ரைன் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் தலைநகர் கீவிற்கு வெளியே ரஷ்ய படைகள் லேசான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் போர் வரும் நாட்களில் உச்சம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் தலைநகரை ரஷ்யா சுற்றி வளைக்கும் திட்டத்தில் இருக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    இந்த நிலையில்தான் இதுவரை உக்ரைன் வான் பகுதியில் விமானங்களை இயக்க சர்வதேச தடை விதிக்கப்படவில்லை. அப்படி செய்யப்பட்டால் ரஷ்ய போர் விமானங்கள் இங்கு பறக்க முடியாது. உக்ரைன் இது தொடர்பாக கோரிக்கை வைத்தாலும் சர்வதேச வான் தடை இங்கு இன்னும் விதிக்கப்படவில்லை. இதையடுத்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி இதை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இந்த நிலையில்தான் ரஷ்ய அதிபர் புடின், வான் வெளியை தடை செய்வதற்கு எதிராக பேசி இருக்கிறார்.

    புடின் விமர்சனம்

    புடின் விமர்சனம்

    அதில், உக்ரைன் போரில் ஐரோப்பாவோ, மற்ற உலக நாடுகளோ மூக்கை நுழைக்க கூடாது. அப்படி செய்தால் அது மிகப்பெரிய பேரழிவு மற்றும் எதிர்பார்க்க முடியாத கடுமையான இழப்புகளை ஏற்படுத்தும். ஐரோப்பாவிற்கு மட்டும் அல்ல உலக நாடுகளுக்கே பேரழிவு ஏற்படும். ஜாக்கிரதை. உக்ரைனில் விமானங்கள் பறக்க தடை செய்தால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். மேற்கு உலக நாடுகள் இப்படி அறிவிக்கும் பட்சத்தில் அது ரஷ்யா மீதான போராக பார்க்கப்படும்.

    ரஷ்யா போர்

    ரஷ்யா போர்

    ரஷ்யா மீது மேற்கு உலக நாடுகள் தொடுக்கும் போராக அதை கருதுவோம். நல்லவேளை இதுவரை மேற்கு உலக நாடுகள் அப்படி செய்யவில்லை. அதனால் கடவுளுக்கு நன்றி. ரஷ்யாவில் அவசர நிலை கொண்டு வரும் திட்டம் கிடையாது. எங்கள் ராணுவம் உக்ரைனில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ராணுவத்திற்கு இடையே மோதல் என்ற தகவல்களில் உண்மை கிடையாது. எல்லாம் திட்டமிட்டபடி சென்று கொண்டு இருக்கிறது.

    மூத்த வீரர்கள்

    மூத்த வீரர்கள்

    மூத்த ராணுவ வீரர்கள் மட்டுமே ரஷ்யாவில் போர் செய்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் வீரர்களுக்கு இடையே மோதல் இல்லை. உக்ரைன் வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதித்தால் எந்த நாடுகள் எல்லாம் தடை விதிக்கிறதோ அவை எல்லாம் எங்களின் எதிரிகளாக கருதப்படும். உக்ரைன் அதிபர் இப்போது நடக்கும் படி நடந்து கொண்டு இருந்தால் அவர்களின் நாடு இருக்குமா என்பது சந்தேகம்தான். உக்ரைன் அதிபர் கொஞ்சம் இதை சிந்தித்து பார்க்க வேண்டும் என்று புடின் விமர்சனம் வைத்து இருக்கிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+