ATOM ஆபரேஷன்! ராட்சச கப்பலை எடுத்துக்கொண்டு பறந்த புடின்! காட்டிக்கொடுத்த சாட்டிலைட்! இனிதான் ஆட்டமே
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடின் திடீர் என்று சொகுசு கப்பல் மூலம் கலினின்கார்ட் என்று பகுதிக்கு சென்றது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைனில் தற்போது உச்சபட்ச போர் நடந்து கொண்டு இருக்கிறது. இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துவிட்டன. உக்ரைன் நாட்டு ராணுவமும் முழுமையாக களத்தில் இறங்கி போராடி வருகிறது. அதேபோல் அந்நாட்டு குடி மக்களுக்கும் ஆயுதங்கள் கொடுத்து களத்தில் இறக்கி உள்ளனர்.
உக்ரைனுக்குள் 60 சதவிகித ரஷ்ய படைகள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இன்னும் 40 சதவிகித படைகள் எல்லை ஓரத்தில் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு உள்ளன.

தனிமையில் இருக்கிறார்
இந்த நிலையில்தான் ரஷ்ய அதிபர் புடின் கடந்த ஒரு வாரமாக தனிமையில் இருக்கிறார். போர் தொடங்கிய முதல்நாள் சில தலைவர்களிடம் பேசினார். அதன்பின் தனக்கு நெருங்கிய வட்டம் ஒன்றாக தவிர வேறு யாரிடமும் இவர் பேசவில்லை. அதோடு புடின் வெளியே வருவதும் இல்லை. ரஷ்ய அதிபர் புடின் யாரையும் சந்திக்காமல் தனிமையில் முடங்கிவிட்டதாக அமெரிக்க செனட்டர் மார்க் வார்னர் உட்பட சில மூத்த அமெரிக்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒரு வகையில் நல்ல விஷயம் கிடையாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். என்பிசி தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் இவர் இந்த தகவலை குறிப்பிட்டார்.

மறைந்தார்
இந்த நிலையில்தான் அடுத்த கட்டமாக புடின் தனது ராட்சச சொகுசு கப்பலில் தப்பித்து சென்றுள்ளார். கலினின்கார்ட் பகுதிக்கு இவர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக க்ரிமிலின் பகுதிக்கு வராமல் ஒதுங்கி இருந்த புடின் இப்போது மொத்தமாக தனது சொகுசு பங்களா இருக்கும் கலினின்கார்ட் பகுதிக்கு சென்றுள்ளார். மிக அதிக மதிப்பு கொண்ட, உள்ளே சிறிய ரக ராக்கெட் லாஞ்சர்கள் கொண்ட தனது கப்பலை எடுத்துக்கொண்டு இவர் புறப்பட்டு இருக்கிறார். தனது பாதுகாப்பு கருதி அவர் இப்படி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகிறது.. 1 பாதுகாப்பு.. 2 சொத்து.. 3 அணு ஆயுத தாக்குதல்!

பாதுகாப்பு கேஜிபி
புடின் முன்னாள் கேஜிஇ ஏஜென்ட். அதாவது சோவியத் யூனியன் காலத்தில் இருந்த உளவுப்படையின் ஏஜென்ட் இவர். இதனால் அவர் தனது பாதுகாப்பு மீது அதிக அக்கறை கொண்டவர். எங்கே எப்போது மறைய வேண்டும். உள்நாட்டு புரட்சியை சமாளிப்பது எப்படி? தனக்கு அருகே இருந்து கொண்டு தனக்கு எதிராக செயல்படும் நபர்களை சமாளிப்பது எப்படி என்று எல்லாம் அவருக்கு தெரியும். இந்த போர் காலத்திலும் எப்படி தன்னை பாதுகாத்துக்கொள்வது என்று புடினுக்கு கண்டிப்பாக தெரியும்.

பணக்காரர்
புடினின் இந்த கப்பல் பல கோடி மதிப்பு கொண்டது ஆகும். அவருக்கு ரஷ்யாவின் பணக்காரர்களான அலிகார்க்ஸ் எல்லோரும் நெருங்கிய நண்பர்கள். புடினே ஒருவகையில் அலிகார்க்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் அரசு வருமானம் 140000 டாலர்கள்தான். ஆனால் இவரின் உண்மையான சொத்து மதிப்பு 100 மில்லியன் டாலரை விட அதிகம் இருக்கும் என்கிறார்கள். உலகில் பெரும் பணக்கார அரசியல்வாதிகளில் புடின் பெரும்பாலும் டாப் 5 இடங்களுக்குள் வருவார்.

எஸ்கேப்
இப்படிப்பட்ட நிலையில்தான் தனது சொத்துக்களை பாதுகாக்க புடின் கலினின்கார்ட் பகுதிக்கு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அலிகார்க்ஸ் சொத்துக்கள் உலகம் முழுக்க முடக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் தனது சொத்துக்களை பாதுகாக்கும், பதுக்கும் வகையில் கலினின்கார்ட் பகுதிக்கு புடின் சென்று இருக்கலாம் என்று சிபிஎஸ் ஊடகம் தெரிவித்து உள்ளது. இதற்கான சாட்டிலைட் புகைப்படங்களை சிபிஎஸ் வெளியிட்டுள்ளது. அங்கு இருந்து அலிகார்க்ஸ் மூலம் இவர் சொத்துக்களை பிற பகுதிகளில் பதுக்கி வைக்க உத்தரவிடலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பான இடம்
அலிகார்க்ஸ் உதவியுடன் இவர் சொத்துக்களை பல்வேறு நாடுகளுக்கு ரகசியமாக அனுப்பி வைக்க வாய்ப்பு உள்ளது. இன்னொரு பக்கம் கலினின்கார்ட் பகுதியில் இவருக்கு இருக்கும் பங்களாவில் பல்வேறு சுரங்க பாதைகள் இருக்கின்றன. ராணுவ பாதுகாப்போடு செல்லும் சுரங்க பாதைகள் இருக்கின்றன. போர் உச்சம் அடையும் நிலையில் இந்த பகுதிக்கு புடின் தனது பாதுகாப்பு கருதி இங்கே சென்று இருக்கலாம் என்கிறார்கள். மேலும் ரஷ்ய ராணுவத்தின் அணு ஆயுத பிரிவும் இங்குதான் உள்ளது. அதாவது அணு ஆயுதங்களை உருவாக்கும், சோதனை செய்யும் யூனிட் ஒன்று இங்கு உள்ளது.
Recommended Video

அணு பிளான்
இதனால் புடின் இங்கே சென்று இருப்பது கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த போர் அணு ஆயுத போராக வெடித்தால் அதனால் பெரிய சேதம் ஏற்படும் என்று முன்பே ரஷ்யா கூறியது. இப்படி இருக்கும் போது அணு ஆயுத யூனிட் இருக்கும் இடத்திற்கு புடின் சென்றுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் ஏற்பட்டுள்ள நிலையில் சமீபத்தில்தான் ரஷ்யா உக்ரைன் அருகே கடல் எல்லையில் மிஸைல் சோதனை நடத்தியது.

தப்பிக்க பிளான்
ஹைப்பர் சோனிக், சூப்பர் சோனிக் மிசைல்களை வைத்து சோதனை செய்தது. ரஷ்யா சோதனை செய்த ஏவுகணைகள் எல்லாமே அணு ஆயுதத்தை தாங்கி சென்று தாக்கும் ஏவுகணைகள் ஆகும். இந்த அணு ஆயுதத்தை தாங்கி சென்று தாக்கும் ஏவுகணைகளை ரஷ்யா சரியாக உக்ரைன் எல்லையில் வைத்து வெற்றிகரமாக சோதனை செய்தது. இதனால் புடினின் இந்த திடீர் பயணம் அணு ஆயுத தாக்குதலுக்கான திட்டமாக இருக்குமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது .
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications