ஆஸ்திரேலியாவில் திருநங்கை காதலியை கொன்று உடலை சமைத்த ஷெஃப்
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் தனது காதலியை கொன்று அவரது உடலை வெட்டி சமைத்த ஷெஃப் போலீசில் இருந்து தப்பி தற்கொலை செய்து கொண்டார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள டெனரிப் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஷெஃப் அதாவது சமையல் கலைஞரான மார்கஸ் வோக்(28). அவருடன் இந்தோனேசியாவைச் சேர்ந்த காபரே டான்ஸரான மாயங் பிரசட்யோவும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வோக் தனது காதலியை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.

சில பாகங்களை சமைத்துவிட்டு மீதமுள்ள பாகங்களை ஒரு பையில் வைத்து குடியிருப்புக்கு வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார். இந்நிலையில் அவர் சமைத்த வாடை வந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஏதோ வித்தியாசமான வாடை வருவதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து வோக்கின் வீட்டை திறந்து பார்த்தபோது தான் பெண் ஒருவரின் உடல் சமைக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வோக்கை பிடித்தனர். இருப்பினும் அவர் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச் சென்று கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு இறந்துவிட்டார்.

இது குறித்து வோக்கின் தாய் டாரத்தி கூறுகையில்,
என் மகன் ஒரு வாரமாக என்னை தொடர்பு கொள்ளவே இல்லை. அவன் என்ன செய்தான் என்று எனக்கு தெரியாது. அவன் கப்பலில் வேலை செய்ததாக கேள்விப்பட்டேன் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications