எங்கெங்கும் பனி.. மான்களுக்கு உணவளித்த நல்லுள்ளங்கள்.. இதயம் அள்ளும் சிகாகோ காட்சிகள்!
சிகாகோ: சிகாகோ நகரம் பனியால் சூழப்பட்டு கிடக்கிறது. வரலாறு காணாத இந்த குளிரை அந்நகரம் 34 வருடங்களுக்கு பிறகு சந்தித்துள்ளது.
மெல்ல மீண்டு வரும் நகரத்துக்குள் நடக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கே.
சென்னை வெள்ளம், கஜா புயல் போன்ற பேரழிவுகள் வரும்போது தான் மனிதனுக்குள் உறங்கி கொண்டிருக்கும் மனித நேயம் தட்டி எழுப்பப்படுகிறது. அது போன்ற ஒரு விஷயம் தான் சிகாகோவிலும் நிகழ்ந்திருக்கிறது.

கடும் குளிரை தாங்க முடியாத காரணத்தினால் வீடு இல்லாத 70 மக்களுக்கு சிலர் சேர்ந்து டௌன்டவுன் பக்கத்தில் கேம்ப் அமைத்து கொடுத்திருக்கிறார்கள். அப்போது சூடாக இருப்பதற்கு ப்ரோபனே டேங்க் கொடுத்து உதவி இருக்கிறார்கள்.
துரதிருஷ்டவசமாக அதில் ஒரு டேங்க் வெடித்து பெரிய நெருப்பு உண்டாகி இருக்கிறது. அப்புறம் தீ அணைப்பு வாகனம் எல்லாம் வந்து கடவுள் அருளால் ஒரு மரணம் கூட நிகழாமல் தப்பித்து விட்டார்கள். அதன் பின் தன்னார்வ தொண்டு நிறுவனமான சால்வட்டின் ஆர்மி தனது வார்மிங் சென்டருக்கு அந்த மக்களை கூட்டிப் போக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அங்கே தான் ட்விஸ்ட்.
பெயர் தெரியாத மனிதர் ஒருவர் அங்கு உள்ள மிக பெரிய ஹோட்டலில் அந்த மக்களுக்கு ஒரு வாரம் தங்க ஏற்பட்டு செய்து விட்டு தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் சென்றிருக்கிறார். ஓன்று அல்ல 70 பேருக்கு 7 நாட்களுக்கு அந்த பெரிய ஹோட்டலில் தங்க இடம் ஏற்பாடு செய்திருப்பது மிக பெரிய விஷயம். அந்த நல்ல மனிதர் யார் என்று தெரியா விட்டாலும் சிகாகோ நகரம் அவரை கொண்டாடி கொண்டிருக்கிறது.
அது மட்டுமில்லைங்க, காடுகளில் உள்ள விலங்குகளுக்கு குளிரில் சாப்பாடு போடவும் மனிதர்கள் படையெடுத்திருக்கிறார்கள்.
சிகாகோ நகரின் குட் சமாரிடன் மாதிரி மாறி நம்ம ஆளுங்க 25 மான் கூட்டத்துக்கு உணவளித்து சூப்பரா செய்கிற காரியங்களை பார்க்க இந்த வீடியோவைப் பாருங்க.
- Inkpena சஹாயா
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications