"அம்மாடியோவ்".. ராணுவத்துக்கு சீனா ஒதுக்கிய நிதியை பாருங்க.. இந்தியாவை விட பல மடங்கு அதிகம்
கடந்த மாதம் கூட ஒரு பெரிய போருக்கு தயாராகுங்கள் என இந்திய எல்லைக்கு அருகே நிறுத்தப்பட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
பெய்ஜிங்: இந்தியாவுடன் பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சீனா, தனது ராணுவத்துக்கு இந்த முறை அதிக அளவில் நிதி ஒதுக்கியுள்ளது.
கிட்டத்தட்ட நடப்பாண்டு பட்ஜெட்டில் இந்திய ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட 3 மடங்கு அதிக நிதியை சீனா தனது ராணுவத்துக்காக ஒதுக்கியுள்ளது.
இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், சீன ராணுவத்துக்கு இவ்வளவு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது ஆசிய பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகுக்கே அச்சறுதலாகி வரும் சீனா
இன்றைய தேதியில் உலகுக்கே அச்சுறுத்தலாக ஒரு நாடு இருக்கிறது என்றால் அது சந்தேகமே இல்லாமல் சீனா தான். இப்போது வரை தனது நாட்டை விரிவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது. ஒருபுறம் இந்தியா, பூடான், ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் எல்லைப் பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. மறுபுறம், தைவான், ஹாங்காங் போன்ற தன்னாட்சி பிரதேசங்களை தனக்கு சொந்தம் எனக் கூறி அச்சுறுத்துகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சமீபத்தில் உலக மக்களை கொத்து கொத்தாக காவு வாங்கிய கொரோனா வைரஸும் அந்நாட்டில் இருந்து வெளியானது தான். இந்த வைரஸ் திட்டமிட்டு சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாக உலக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வளவு நிதியா..
இதுபோல தென்சீனக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றையும் சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக உரிமைக் கொண்டாடி வருகிறது சீனா. மிகப்பெரிய அணுசக்தி நாடு என்பதால் அமெரிக்கா கூட சீனாவிடம் சற்று அடக்கியே வாசித்து வருகிறது. இவ்வாறு உலகுக்கே அச்சுறுத்தலாக இருக்கும் சீனா, தனது ராணுவத்துக்கு நடப்பாண்டு 1.55 டிரில்லியன் யுவான் நிதியை (ரூ.18 லட்சத்துக்கு 33 ஆயிரம் கோடி) ஒதுக்கியுள்ளது.

இந்தியாவை விட 3 மடங்கு அதிக நிதி
அதே சமயத்தில், இந்தியா நடப்பாண்டு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.5.94 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது. இதனுடன் ஒப்பிட்டால், சீனா 3 மடங்கு அதிகமாக தனது ராணுவத்துக்கு நிதி ஒதுக்கியிருக்கிறது. உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக ராணுவத்துக்கு அதிகமாக செலவிடும் நாடு சீனா மட்டும் தான். அதேபோல, உலகிலேயே மிகப்பெரிய ராணுவமும் சீனாவிடம்தான் உள்ளது. அந்நாட்டு ராணுவத்தில் 20 லட்சம் வீரர்கள் உள்ளனர். இந்திய ராணுவத்தில் 12 லட்சம் வீரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

"போருக்கு தயாராகுங்கள்"
இந்த முறை சீனா தனது ராணுவத்துக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக நிதியை ஒதுக்கி இருப்பதை இந்தியா சற்று கவனமாக பார்த்து வருகிறது. இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தையும், லடாக்கையும் கைப்பற்ற துடித்து வருகிறது சீனா. அருணாச்சலும் சரி, லடாக்கும் சரி, இயற்கை அரண்கள் நிறைந்த பகுதிகள். எனவேதான், இந்தப் பகுதிகளை கைப்பற்ற சீனா விரும்புகிறது. ஆனால், இந்தப் பகுதிகளை கைப்பற்ற சீனா எடுத்து வந்த அனைத்து முயற்சிகளை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்துள்ள சீனா, இந்திய எல்லைப் பகுதிகளில் தனது ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது. மேலும், கடந்த மாதம் கூட ஒரு பெரிய போருக்கு தயாராகுங்கள் என இந்திய எல்லைக்கு அருகே நிறுத்தப்பட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications