உலகின் டாப் பிராண்டுகள் எல்லாம் அழிய போகிறது.. தானோஸ் போல சீனா போட்ட சொடக்கு.. எல்லாம் காலி!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தக போருக்கு சீனா பல வகைகளில் பதிலடி கொடுத்து வருகிறது. அதில் புதிய ரூட்.. அமெரிக்காவின், மேற்கு உலக நாடுகளின் டாப் பிராண்டுகளுக்கு குறி வைப்பது. ஆம்.. உலகின் டாப் பிராண்டுகளை அழிக்கும்.. எப்படி அவெஞ்சர்ஸ் தானோஸ் ஒரு சொடக்கு போட்டால் எதையும் அழிக்க முடியுமோ அப்படி சீனா சொடக்கு போட்டு உள்ளது.

அமெரிக்க ஆடம்பர பிராண்டுகள் எல்லாம் தங்கள் நாட்டில்தான் தயாரிக்கப்படுகின்றன என்ற சீக்ரெட்டை உடைக்க தொடங்கி உள்ளன. பெரிய பிராண்டுகள் தொடங்கி சிறிய பிராண்டுகள் வரை அதன் தயாரிப்பை கவனிப்பவர்கள் ஆய்வு செய்பவர்களுக்கு ஒரு விஷயம் புலனாகும். பெரும்பாலான பொருட்கள் சீனாவில் தயாரிக்கப்படுபவை. உருவாக்கப்படுபவை. அல்லது பாகங்கள் சீனாவில் உருவாக்கப்பட்டு வேறு நாட்டில் அசெம்பிள் செய்யப்படுபவை. உதாரணமாக நீங்கள் வாட்ச், போன், லேப்டாப், லெதர் பேக் தொடங்கி எதை பயன்படுத்தினாலும் அதில் சீனாவின் கை இருக்கும். ஏதாவது ஒரு பொருள் முழுக்க முழுக்க சீனாவில் உருவாக்கப்பட்டதாக இருக்கும்.

Donald Trump India china

உடைக்கப்பட்ட ஒப்பந்தம்

ஆனால் இத்தனை காலம் சீனாவே வெளிப்படையாக வந்து இந்த பொருட்களை எல்லாம் நாங்கள் உருவாக்குகிறோம் என்று சொன்னது இல்லை. அதாவது made in china என்று உள்ளே பிரிண்ட் செய்வதை தவிர.. சீனாவின் பேக்டரிகள் தானாக முன்வந்து நாங்கள்தான் இந்த பொருட்களை உருவாக்குகிறோம் என்று சொன்னது இல்லை. இதற்கு இரண்டு ஒப்பந்தம் காரணம்.. ஒன்று confidentiality contract இன்னொன்று intellectual property contract. அதாவது ரகசிய காப்பு ஒப்பந்தம், காப்புரிமை ஒப்பந்தம். இந்த இரண்டு ஒப்பந்தங்களை சீனா தற்போது உடைக்க முடிவு செய்துள்ளது.

நாங்கள்தான் உருவாக்குகிறோம்

அதன்படி தங்கள் நாட்டில் உருவாக்கப்படும் பொருட்களை எல்லாம் அம்பலப்படுத்த தொடங்கி உள்ளனர். Louis Vuitton, Chanel, Birkin, Prada, Bobbi Brown மற்றும் பலவற்றை உள்ளடக்கிய உலகின் மிகப் பெரிய பிராண்டுகள் இதன் மூலம் அம்பலம் ஆகி உள்ளனர். சீன உற்பத்தியாளர்கள் இதை நாங்கள்தான் உருவாக்குகிறோம் என்று ஆதாரத்தோடு வீடியோ , ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர். இன்ஸ்ட்டாகிராம் முழுக்க இந்த வீடியோக்கள்தான் உள்ளன.

ரால்ப் லாரன், அர்மானி, நைக், டியோர், லுலுலெமன், ஆப்பிள், மைக்கேல் கோர்ஸ், பயிற்சியாளர், சிகே, பிராடா, செலின், ஸ்வரோவ்ஸ்கி, அடிடாஸ், தி நார்த் ஃபேஸ், ரிமோவா, லெவிஸ், பர்பெர்ரி, வெர்சேஸ், சேனல், கார்டியர், ஃபெர்ராகமோ, டிம்பர்லேண்ட், ஒய்எஸ்எல், விக்டோரியா, விக்டோரியா, விக்டோரியா DKNY, Givenchy, Nike, Adidas, FILA, UGG, Chanel, Estee Lauder மற்றும் L'Oreal போன்ற பல நிறுவனங்களை நாங்கள்தான் உருவாக்குகிறோம் என்று சீன நிறுவனங்கள் அம்பலப்படுத்தி உள்ளன.

நேரடியாக எங்களிடமே வாங்குங்கள்

அதோடு இந்த நிறுவனங்கள் intellectual property contract அதாவது காப்புரிமை ஒப்பந்ததந்தையும் உடைத்து உள்ளனர். அதாவது நீங்கள் இந்த பொருட்களை பல லட்சம் டாலர்கள் கொடுத்து வாங்குவதற்கு பதில் எங்களிடம் சில நூறு டாலர்கள் தந்து வாங்கிக்கொள்ளுங்கள். எங்களிடம் 1000 ரூபாய் பொருளை 1 ரூபாய்க்கு வாங்கலாம். அதோடு ஏற்றுமதி இறக்குமதி வரிகளை சேர்த்தால்.. அதாவது டிரம்ப் போடும் வரிகளை சேர்த்தால் கூட உங்களுக்கு அதன் செலவு 250 ரூபாய்க்கு மேல் ஆகாது.

நீங்கள் அமெரிக்காவில் பிராண்டு பெயரில் பொருட்களை வாங்குவதற்கு பதில் எங்களிடம் இருந்து நேரடியாக வாங்கலாம். நாங்களே பிராண்ட் பெயர் போட்டு நேரடியாக விற்போம். அல்லது பிராண்டு இல்லாமல் உங்களுக்கு பிடித்தபடி தருவோம். அல்லது நீங்கள் கேட்கும் பிராண்டு பெயரில் கூட white label போட்டு தருவோம் என்று வீடியோக்களை வெளியிட தொடங்கி உள்ளனர்.

இது கிரே மார்க்கெட் இல்லை

சீன உற்பத்தியாளர்கள் இதை நாங்கள்தான் உருவாக்குகிறோம் என்று ஆதாரத்தோடு வீடியோ , ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர். இன்ஸ்ட்டாகிராம் முழுக்க இந்த வீடியோக்கள்தான் உள்ளன. இவை கிரே மார்க்கெட் இல்லை. இந்த நிறுவனங்கள்தான் ஒரிஜினல் பொருட்களை விற்கின்றன. அதே நிறுவனங்கள் இப்போது நேரடியாக மக்களிடம் விற்க அல்லது வெளியே விற்க முடிவு செய்துள்ளன.

எப்படி பெரிய பிராண்ட் அழியும்?

இதனால் உலகின் டாப் பிராண்டுகள் எல்லாம் அழிய போகிறது. உதாரணமாக ஒரு பிராண்டை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த அமெரிக்க நிறுவனத்தின் பெயர் 2 பிளஸ் என்று வைத்துக்கொள்வோம். அதை சீனா உருவாக்குகிறது. ஆனால் அமெரிக்க நிறுவனம் தங்களின் பொருள் போல white label போட்டு இத்தனை காலம் விற்றது. இப்போது அதை உருவாக்கி வந்த சீன பேக்டரி அதை குறைந்த விலைக்கு உலகம் முழுக்க விற்க போகிறோம் என்று கூறுகிறது.

அப்படி என்றால் அந்த 2 பிளஸ் நிறுவனம் அழியும். ஏனென்றால் அதேபோன்ற பிராண்டு வேறு வேறு பெயரில் உருவாகும். அதாவது puma பெயரில் puna என்ற பிராண்டு வந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் இரண்டும் ஒரே தரத்தில் இருந்தால் எப்படி இருக்கும். அதைத்தான் சீனா செய்கிறது. அமெரிக்காவின் வரிகளுக்கு பதிலடியாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வரி மேல் வரி

சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா 245% வரை வரிகளை விதித்துள்ளது. சீனாவின் பதிலடி வர்த்தக நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை இன்று வெளியிட்டது.

சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தக போர் உச்சம் அடைந்து உள்ளது. இது ஆயுதம் ஏந்திய போர் இல்லையென்றாலும் அதே அளவிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஆயுத போர் மூலம் நிர்வாக பிரச்சனை வரும், உலக பொருளாதாரம் சரியும், மக்கள் வேலைகளை இழப்பார்கள், பல துறைகள் சரிந்து புதிய துறைகள் உருவாகும், பல வளர்ந்த நாடுகள் சரியும், உலக நாடுகள் இடையே உறவுகள் கசக்கும், உற்பத்தி பாதிக்கும், ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கும். இதெல்லாம் ஆயுத போரில் மட்டுமன்றி... டிரம்ப் தொடங்க உள்ள வர்த்தக போரிலும் நடக்கும் அபாயம் உள்ளது. பக்கவிளைவுகள் ஒரே மாதிரிதான் இருக்கும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். இதுதான் உலக அளவில் பெட்ரோல் டீசல் விலை சரிய காரணம் ஆகும். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது வர்த்தக போரை அறிவித்து உள்ளார். 10% அடிப்படை வரி உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் மீதும் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பதிலடி வரி விதிப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத விகிதத்தையும் சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கிறது. இந்தியா 26 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம் மற்றும் ஜப்பான் 24 சதவீதம்., வரி விதிக்கப்படும்.அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டு உள்ளது. சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+