ஓநாய் வீரர்கள் வந்துவிட்டனர்.. சீனா களமிறக்கிய புதிய "படை".. இந்தியா, அமெரிக்காவை சீண்ட புது யுக்தி
பெய்ஜிங்: இந்தியா மற்றும் அமெரிக்காவை சமாளிக்கும் வகையில் சீனா தற்போது புதிதாக wolf warriors என்று அழைக்கப்படும் ஓநாய் வீரர்களை களமிறக்கி உள்ளது.
Recommended Video
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நாளுக்கு நாள் சண்டை தீவிரம் அடைந்து கொண்டே செல்கிறது. லடாக் எல்லையில் சீனா நாளுக்கு நாள் அதிக அளவில் படைகளை குவித்து வருகிறது. அதேபோல் இன்னொரு பக்கம் சிக்கிம் எல்லையிலும் பதற்றம் நீடித்து வருகிறது.
இதனால் லடாக் அருகே பாங்காங் திசோ பகுதியில் மிக அதிக அளவில் இரண்டு நாட்டு படைகள் குவிக்கப்பட்டு உள்ளது. அங்கு நவீன ஆயுதங்களும் களமிறக்கப்பட்டு உள்ளது. விமான படைகளும் தயார் நிலையில் இருக்கிறது.

அமெரிக்கா சண்டை
இந்தியாவுடன் இந்த பக்கம் சண்டை நடந்து வரும் நிலையில், தற்போது இன்னொரு பக்கம் அமெரிக்கா உடனும் சீனா சண்டை போட்டு வருகிறது. அமெரிக்காவுடன் தென் சீன கடல் எல்லையில் சண்டை போட்டு வருகிறது. அதேபோல் இன்னொரு பக்கம் வர்த்தக ரீதியாகவும் சண்டை நடக்கிறது. அதேபோல் ராஜாங்க ரீதியாகவும் சீனாவை தனிமைப்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட சில உலக நாடுகள் முயன்று வருகிறது.

ஓநாய்கள் படை
இதனால் இந்தியா மற்றும் அமெரிக்காவை சமாளிக்கும் வகையில் சீனா தற்போது புதிதாக wolf warriors என்று அழைக்கப்படும் ஓநாய் வீரர்களை களமிறக்கி உள்ளது. அதாவது இந்தியா மற்றும் அமெரிக்காவை ஒரே நேரத்தில் சமாளிக்கும் வகையில் இந்த படைகளை சீனா களமிறக்கி உள்ளது. ஆனால் இந்த ஓநாய் வீரர்கள் படை என்பது ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தும் படை கிடையாது.

எப்படி ஒரு குழு
மாறாக ஓநாய் வீரர்கள் படைநேரடியாக இணையத்தில் தலைவர்களை தாக்கும் படை ஆகும். அதேபோல் ராஜாங்க ரீதியாக காரியங்களை சாதிக்கும் குழு ஆகும். வெளிநாடுகள் இணையத்தில் செய்யும் பிரச்சாரங்களை முறியடிக்க ஓநாய் வீரர்கள் படை வீரர்கள் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள் . ஆனால் இவர்கள் ஃபேக் ஐடி கிடையாது. இதற்காக அரசே பணியாளர்களை நியமிக்கும் பணிகளை செய்து வருகிறது.

மோசமான ஐடியா
அதாவது சீனாவின் புதிய ராஜாங்க ரீதியான திட்டங்கள் மற்றும் வெளியுறவு கொள்கையில் ஓநாய் வீரர்கள் படை களமிறக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுடன் போர் ரீதியான ஒப்பந்தங்கள், மிரட்டல்களை இவர்கள்தான் செய்ய போகிறார்கள். உதாரணமாக இப்போது தைவான் உடன் இருக்கும் பிரச்சனையை சீனாவின் அமைதியான வெளியுறவுத்துறை அதிகாரிகள் கவனிக்க மாட்டார்கள். மாறாக தைவான் பிரச்சனையை ஓநாய் வீரர்கள் படை வீரர்கள் கவனித்துக் கொள்வார்கள்.

இந்தியா பிரச்சனை
தற்போது இந்தியாவிற்கு எதிராகவும், அமெரிக்காவிற்கு எதிராகவும் சீனா கடுமையாக குரல் கொடுத்து வருகிறது. வெளிப்படையாக இவர்கள் எச்சரிக்கை விடுக்க தொடங்கி உள்ளது. இதற்கு பின் இப்படி ஓநாய் வீரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த குழுவின் சீனாவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள், ராணுவ மேஜர், செய்தியாளார்கள், அரசியல் விமர்சகர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

அவர்கள் வேலை
ஒரு நாட்டை அவமானப்படுத்துவது. அந்நாட்டைஇகழ்ந்து பேசுவது. அந்த நாட்டை மிக மோசமாக மிரட்டுவது. ரகசியங்களை வெளியிட போவதாக மிரட்டுவது, உளவு தகவல்களை வெளியிட போவதாக கூறுவது ஓநாய் வீரர்கள் படையின் முக்கிய ஸ்டைல் ஆகும். இதனால் தற்போது இந்தியாவையே கூட, போர் ஏற்பட்டால் பெரிய இழப்பு உங்களுக்கு ஏற்படும், ஜாக்கிரதை என்று சீனா மிரட்டி இருக்கிறது. இதுவும் ஓநாய் வீரர்கள் படையின் வேலைதான் என்கிறார்கள்.

மூர்க்கமான பணிகள்
இதற்கு முன் சீனாவிலிருந்த சாந்தமான வெளியுறவுத்துறை அதிகாரிகள் போல இவர்கள் இருக்க மாட்டார்கள். மிகவும் மூர்க்கமாக ராஜாங்க ரீதியான கொள்கையை இவர்கள் கொண்டு இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. உலக அளவில் கொரோனா காரணமாக சீனாவை அமெரிக்கா இகழ்ந்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது அமெரிக்காவை இகழும் பொருட்டு ஓநாய் வீரர்கள் படைகள் களமிறக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
குவைத், பஹ்ரைன் மீது சரமாரி தாக்குதள்.. ஈரானின் வெறியாட்டம்.. CENTCOM கொடுத்த பகீர் அறிக்கை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications