யாருகிட்ட வால் ஆட்டுறீங்க.. அமெரிக்கா உள்ளிட்ட மொத்த உலக நாடுகளுக்கும்.. ஆப்பு வைத்த சீனா.. போச்சு

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் அரியவகை கனிமங்கள் மற்றும் தனிமங்களை நிறுத்த போவதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. சீனாவின் மீது அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா அதிபர் ஜி ஜின்பிங் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு 50 கனிமங்களை முக்கியமானதாக வகைப்படுத்துகிறது. அதாவது அரியவகை கனிமங்கள் என்று வகைப்படுத்துகிறது. கோபால்ட், லித்தியம், மாங்கனீசு மற்றும் நிக்கல் ஆகியவை ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் மற்றும் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன, அதே நேரத்தில் செம்பு சோலார் பேனல்கள் மற்றும் மின் இணைப்புகளிலும் இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது, PV பேனல்களில் சிலிக்கான் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரிகளில் கிராஃபைட் பயன்படுத்தப்படுகிறது. ஆர்சனிக், காலியம் மற்றும் டெல்லூரியம் ஆகியவை சூரிய மின்கலங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

Donald Trump India

உலகளவில் இந்த முக்கியமான கனிமங்களின் உற்பத்தியில் 60% சீனா கட்டுப்படுத்துகிறது. அதேபோல் உலகளாவிய அளவில் இந்த கனிமங்களை பயன்படுத்தும் செயலாக்கத் திறனில் 85%ஐ சீனா கட்டுப்படுத்துகிறது. மீதமுள்ள திறன் காங்கோ ஜனநாயகக் குடியரசு (DR காங்கோ) மற்றும் இந்தோனேசியா போன்ற அதிக சீன முதலீட்டைக் கொண்ட நாடுகளில் அமைந்துள்ளது. இந்த சீனாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் அரியவகை கனிமங்கள் மற்றும் தனிமங்களை நிறுத்த போவதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில்தான் சீனாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் அரியவகை கனிமங்கள் மற்றும் தனிமங்களை நிறுத்த போவதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது

பரஸ்பர வரி

அமெரிக்கா விதித்த வரிக்கு பதிலடியாக சீனா, அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரியை விதித்தது. இதனால் கடும் கோபம் அடைந்த டொனால்டு டிரம்ப், சீனாவிற்கு ஒருநாள் கெடு விதித்துள்ளார். அதற்குள் சீனா தனது கூடுதல் வரிவதிப்பை திரும்ப பெற வேண்டும் என்றும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

வர்த்தக போர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். இதுதான் உலக அளவில் பெட்ரோல் டீசல் விலை சரிய காரணம் ஆகும். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது வர்த்தக போரை அறிவித்து உள்ளார். 10% அடிப்படை வரி உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் மீதும் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பதிலடி வரி விதிப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத விகிதத்தையும் சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கிறது. இந்தியா 26 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம் மற்றும் ஜப்பானுக்கு 24 சதவீதம், வரி விதிக்கப்படும். அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டு உள்ளது. சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பதிலடி வரிகள் என்றால் என்ன?

முதலில் இது என்ன வர்த்தக போர் என்று பார்க்கலாம் . அமெரிக்க அதிபர் டிரம்ப் reciprocal tariff எனப்படும் வரிகளை விதிக்க உள்ளார். அதாவது பதிலடி வரி. அதாவது இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரியை அப்படியே இந்தியா மீது அமெரிக்கா விதிக்கும். அதாவது ஒரு துறையில் உள்ள ஒரு பொருளுக்கு இந்தியா 30 சதவிகிதம் வரி விதிக்கிறது. அமெரிக்கா 10 சதவிகிதம்தான் வரி விதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த புதிய விதிப்படி அமெரிக்காவும் அதே 30% வரியை இனி விதிக்கும்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பதிலடி வரிகளை விதிக்க போவதாக அறிவித்து உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். விவசாய பொருட்கள் மீது 100% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடும் பாதிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் வருடத்திற்கு சுமார் $7 பில்லியன் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருடா வருடம் இந்தியாவிற்கு இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க அதிபரின் வர்த்தக போர் காரணமாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவை இரசாயனங்கள் துறை, உலோக பொருட்கள் துறை, நகைகள் துறை, மேலும் ஆட்டோமொபைல்கள் துறை, மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் துறை ஆகியவை பாதிக்கப்படும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக இரசாயனங்கள், உலோக பொருட்கள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். இந்தியாவில் இருந்து செய்யப்படும் ஆட்டோமொபைல் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். இந்த ஏற்றுமதி 15 சதவிகிதம் வரை பாதிக்கும், மருந்து ஏற்றுமதி 30 சதவிகிதம் வரை குறையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க பொருட்கள் மீதான வரி குறைப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் பிரதமர் மோடி சந்திப்பு நடத்திய நிலையில், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை இந்தியா குறைக்க தொடங்கி உள்ளது. அமெரிக்கா இந்தியாவின் வரி விதிப்பை விமர்சனம் செய்த நிலையில்.. இந்தியா வரியை குறைக்க தொடங்கி உள்ளது. போர்பன் விஸ்கி மீதான வரியை இந்தியா 150%ல் இருந்து 100% ஆக குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு Suntory's Jim Beam போன்ற பிரபல அமெரிக்க பிராண்டுகளின் இறக்குமதிக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கப் பொருட்களுக்கு, குறிப்பாக மதுபானத் துறையில் இந்தியாவின் நியாயமற்ற வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

முழு லிஸ்ட்

இந்தியாவின் இன்னொரு அண்டை நாடான இலங்கை மீதி இதை விட டபுள் மடங்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது. இலங்கை மீது 44% வரி விதிக்கப்படுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதோடு தைவான் மீது 32% வரிகளை விதித்து உள்ளார். இதில் தைவானை இதுவரை அமெரிக்கா தனி நாடாக அங்கீகரித்தது இல்லை. இப்போது இந்த வரி மூலம் மறைமுகமாக தனி நாடாக அங்கீகரித்து உள்ளது.

• சிலி 10%
• இந்தியா 26%
• இஸ்ரேல் 17%
• பிரேசில் 10%
• சீனா 34%
• ஜப்பான் 24%
• துருக்கி 10%
• தைவான் 32%
• வியட்நாம் 46%
• பாகிஸ்தான் 29%
• தாய்லாந்து 36%
• ஆஸ்திரேலியா 10%
• மலேசியா 24%
• கொலம்பியா 10%
• இலங்கை 44%
• சிங்கப்பூர் 10%
• இந்தோனேசியா 32%
• கம்போடியா 49%
• பிலிப்பைன்ஸ் 17%
• சுவிட்சர்லாந்து 31%
• பங்களாதேஷ் 37%
• தென் கொரியா 25%
• தென்னாப்பிரிக்கா 30%
• யுனைடெட் கிங்டம் 10%
• ஐரோப்பிய ஒன்றியம் 20%

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+