பீலா விடாதீங்க.. நாங்க வெளவால் கறியெல்லாம் விக்கிறதில்லீங்க.. சீன தூதரகம் பொளேர் பொளேர்!
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தொடர்பாக சீனா மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை, இந்தியாவுக்கான சீன தூதரக செய்தித் தொடர்பாளரான, ஜி ரோங் மறுத்துள்ளார்.
Recommended Video
இது தொடர்பாக, அந்த பெண்மணி வரிசையாக சில டிவிட்டுகளை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதை பாருங்கள்:

சீனாவில் உள்ள வுஹான் நகரம் முதலில் COVID19 பாதிப்பு குறித்து, வெளி உலகத்திற்கு தெரிவித்தது. அதனால், வுஹானில் வைரஸ் தோன்றியது என்று அர்த்தமல்ல. வைரஸுக்கு எவ்வாறு பெயரிடுவது என்பது குறித்த குறிப்பிட்ட விதிகள் உலக சுகாதார அமைப்பில் உள்ளது. எனவே, வைரஸை வுஹானுடன் இணைத்து, பெயரிட்டு, சீனாவை களங்கப்படுத்துவது பொறுப்பற்றது.

SARS-CoV-2 இயற்கையானது, மனிதனால் உருவாக்கப்பட்டவை அல்ல என்பதை ஆதாரங்கள் சுட்டிக் காட்டுகிறது. வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஒரு புதிய கொரோனா வைரஸை வடிவமைக்கவோ அல்லது ஒருங்கிணைக்கவோ இல்லை. நிறுவனத்தில் நோய்க்கிருமி கசிவுகள் அல்லது ஊழியர்களுக்கு, தொற்று ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

வெளவால்கள் ஒருபோதும் சீன உணவுகளின் ஒரு பகுதியாக இல்லை. வுஹான் கடல் சார் உணவு சந்தையில் வெளவால்கள் விற்பனை கிடையாது. வைரஸ் பரவியது எங்கேயிருந்து என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சீனாவில் வனவிலங்கு வெட் சந்தைகள் என்று அழைக்கப்படுபவை எதுவும் இல்லை.

தெரியாத வைரஸின் எதிர்பாராத தாக்குதல் குறித்து ஆய்வு செய்ய கால அவகாசம் தேவைப்படும். சர்வதேச சமூகத்திற்கு சீனா, தொற்றுநோய்களின் தகவல்களை பொறுப்புடன் முடிந்த அளவுக்கு வேகமாக அளித்தது.

டாக்டர் ஜாங் ஜிக்சியன் தான் COVID19 பற்றி முதன்முதலில் வெளியே தெரிவித்தார். இதற்காக வெகுமதி வழங்கப்பட்டது. இதேபோல, டாக்டர் லி வென்லியாங் அரசின் குறைகளை சொல்லும் விசில் ப்ளோவர் கிடையாது. அவர் கைது செய்யப்படவில்லை. அவர் ஒரு நல்ல மருத்துவர். அவரை "அரச எதிர்ப்பு ஹீரோ" என்று முத்திரை குத்துவது அரசியல் காரணங்களுக்காகத்தான்.

சீனா தனது தரவுகளில் திறந்த மற்றும் வெளிப்படையானதாக உள்ளது. சரியான நேரத்தில், நாங்கள் எடுத்த வலுவான நடவடிக்கைகளால் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தது. இதில் போலி புள்ளி விவரம் ஏதும் கிடையாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

-
ஜப்பானுக்கு தண்ணி காட்டும் சீனா.. இருந்தது ஒன்னே ஒன்னு அப்போ அதுவும் போச்சா!! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications