Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேவையில்லாம பேசாதீங்க.. நாங்க அப்படி பண்ணல! 'உளவு' பலூன் விவகாரத்தில் சீனா கறார் விளக்கம்

சீனாவின் இந்த பலூன் அதிக உயரத்தில் பறப்பதால் சாதாரண வணிக விமானங்களுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: அமெரிக்கா மீது சீனாவின் பலூன் பறந்து உளவு பார்த்ததாக பென்டகன் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இதனை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. சீனா எந்த நாட்டின் விதிமுறைகளையும் மீறவில்லை என்றும் கூறியுள்ளது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், அமெரிக்க சபாநாயகர் கடந்த ஆண்டு திடீரென தைவானுக்கு சென்றிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீன அரசு, அன்றைய தினமே ஜெட் விமானங்களை கொண்டு போர் பயிற்சியில் ஈடுபட தொடங்கியது. இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் போக்கை மேலும் கூர்மையாக்கியுள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டன.

இந்நிலையில் நாளை(பிப்.05) அமெரிக்கா சார்பில் அதன் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளங்கன் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள இருந்ததாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை திடீரென அமெரிக்க வான்வெளி பரப்பில் ஒரு பலூன் ஒன்று பறந்துக்கொண்டிருந்தது. இதனை ஆய்வு செய்த ராணுவம், இந்த பலூன் சீனாவினுடையது என்றும், தங்கள் நாட்டை உளவு பார்க்கவே இதனை அனுப்பியுள்ளதாகவும் குற்றம்சாட்டியது.

 உளவு பணி

உளவு பணி

இது குறித்து அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் விடுத்த அறிக்கையில், "இது ஏதோ வழித்தவறி வந்த பலூன் என்பதாக நாங்கள் நினைத்தோம். இருப்பினும் ஆய்வு செய்து பார்த்தபோது இது சீனா நாட்டுக்கு சொந்தமான பலூன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு உளவு பலூனாகும். இச்செயல் அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு விதிமீறலாகும். எங்களது தூதரகம் மூலம் இதனை சீனாவுக்கு விளக்குவோம். இப்பலூனை சுட்டு வீழ்த்தலாம் என்று நினைத்தோம். ஆனால் அது கீழே உள்ள மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் இந்த ஐடியா கைவிடப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தது.

 மறுப்பு

மறுப்பு

ஆனால் இந்த குற்றச்சாட்டை சீனா திட்டவட்டமாக மறுத்தது. இந்த பலூன் வானிலையை ஆய்வு செய்யவே அனுப்பப்பட்டதாகவும், இதில் உளவு பாரக்கும் கருவிகள் எதுவும் இல்லையென்றும், அதற்கான நோக்கமும் தங்களுக்கு இல்லையெனவும் கூறியது. மேலும், "இந்த பலூன் காற்றின் வேகம் காரணமாக அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் நுழைந்துள்ளது. இதற்காக நாங்கள் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். இது தொடர்பாக அமெரிக்காவை தொடர்பு கொண்டு உரிய விளக்கம் அளிக்கப்படும்" என்றும் கூறியிருந்தது. ஆனால் இந்த விளக்கத்தை பென்டகன் ஏற்கவில்லை.

 விளக்கம்

விளக்கம்

இந்த சண்டை ஒருபக்கம் நடந்துக்கொண்டிருக்கையில் மறுபுறம் இதேபோன்று மற்றொரு பலூன் லத்தின் அமெரிக்க நாடுகள் மேல் பறந்துக்கொண்டிருப்பதை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது. எனவே இந்த பிரச்னையை பெரியதாக எழுப்ப அமெரிக்க முடிவெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பிளிங்கனின் சீன பயணத்தையும் அந்நாடு ரத்து செய்துள்ளது. இந்நிலையில் இது குறித்து சீனா விளக்கமளித்துள்ளது. சீன வெளியுறவுத்துறை இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் சீன பலூன்கள் பறந்த விவகாரத்தில் அமெரிக்க அரசியல் வாதிகள் இதில் ஆதாயம் தேட முயல்கின்றனர்.

 பிளிங்கன் பயணம்

பிளிங்கன் பயணம்

இது தொடர்பாக அமெரிக்க அரசு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை சில ஊடகங்களும், அரசியல்வாதிகளும் தங்களுக்கு சாதகமானதாக பயன்படுத்திக்கொள்கின்றனர். சீனா எந்தவொரு இறையாண்மையுள்ள நாட்டின் எல்லையையும் வான்வெளியையும் ஒருபோதும் மீறவில்லை. ஆனால் இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசியல்வாதிகள் சீனாவை கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்" என்று கூறியுள்ளது. அதேபோல பிளிங்கனின் பயணம் குறித்து கூறுகையில், "உண்மையில் சீனாவோ, அமெரிக்காவோ எந்த பயணத்தையும் இதுவரை அறிவிக்கவில்லை" என்று கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+