China Coffee: "ஈ" விழுந்தாலே கீழே ஊத்திடுவோம்! இதுல கரப்பான்பூச்சில காபியா? புழுவும் மிக்ஸிங்காம்!
பெய்ஜிங்: சீனா தலைநகர் பெய்ஜிங்கில் கரப்பான்பூச்சி, கோதுமை புழுக்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு புதிய காபியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்.

காபி, டீ-யை அதிகம் பேர் குடித்து வருகிறார்கள். அதிலும் பிளாக் காபி, கோல்ட் காபி, கருப்பட்டி காபி, சாக்லேட் காபி என்றும் டீ என எடுத்துக் கொண்டால் லெமன் டீ, பிளாக் டீ, கிரீன் டீ என வந்துள்ளது. துபாயில் தங்க டீ விற்கப்படுகிறது.
அதாவது வெள்ளி டம்ளரில் 24 காரட் தங்க காகிதத்தை வைத்து மூடி வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகிறார்கள். வாடிக்கையாளர்கள் விரும்பினால் அந்த வெள்ளி டம்ளரை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்லலாம். இந்த டீ 1 லட்ச ரூபாய்!
இப்படி 15 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை டீ விற்பனை செய்யப்படுகிறது. டீ, காபியில் எத்தனையோ புதுமைகள் வந்துவிட்டன. காபி நுரையில் டிசைன் போடும் அளவுக்கு முன்னேற்றம் உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் கரப்பான்பூச்சி, காய்ந்த கோதுமை புழுக்களில் இருந்து காபி தயாரிக்கப்படுகிறது. இதை கேட்க நமக்கு அதிர்ச்சியும் அருவருப்பும் இருந்தாலும் சீன இளைஞர்களுக்கு அதிக வரவேற்புத் தருகிறார்களாம்.
ஆம்! சீனாவில் பெய்ஜிங் பகுதியில் உள்ள பூச்சிகள் அருங்காட்சியகத்தில் கரப்பான் பூச்சி, உயர்ந்த மஞ்சள் நிற புழுக்களின் பவுடர் கலந்து ஒரு காஃபியை விற்பனை செய்யப்படுகிறது. இந்த காபி உடல்நலனுக்கு நன்மைகளை செய்வதாகவும் சொல்லப்படுகிறது.
இது குறித்து சீன ஊடகங்களான சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த காஃபி கடந்த ஜூன் மாதம் கண்டறியப்பட்டதாம். ஆனால் தற்போதுதான் அது பிரபலமடைந்துள்ளதாம்.
ஏன் கரப்பான் பூச்சி பவுடர் கலந்த காபி தயாரிக்கப்படுகிறது என்றால் பூச்சிகள் பற்றிய அருங்காட்சியகம் என்பதால் அதை வைத்து காபி தயாரிக்க அந்த அருங்காட்சியகம் திட்டமிட்டிருந்ததாம்.
இந்த காபியின் விலை 45 யுவான். அதாவது இந்திய மதிப்பில் ரூ 560 ஆகும். சராசரியாக ஒரு நாளைக்கு 10 கப் காபி விற்பனை செய்யப்படுகிறதாம். இந்த காபியில் ஏதோ எரித்தது போன்று ஒரு வாசமும், புளிப்பு சுவையும் இருப்பதால் இதை இளைஞர்கள் விரும்பி குடிக்கிறார்கள்.
இந்த காபி மூலிகைகளில் இருந்து உருவாக்கப்படுகிறதாம். இதனால் உடலுக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாது என்கிறார்கள். சீன மருத்துவ கோட்பாடுகளின்படி கரப்பான்பூச்சியின் தூளானது ரத்த ஓட்டத்திற்கு உதவுகிறதாம். புரதம் நிறைய உணவு புழுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது என்கிறார்கள்.
எறும்பு காபி கூட சில விழாக்களில் பரிமாறப்படுகிறதாம். இந்த கரப்பான்பூச்சி காபியை இளைஞர்கள், குழந்தைகள் விரும்பிக் குடிக்கிறார்களாம். ஆனால் பெற்றோருக்கு அந்த சுவை பிடிக்கவில்லை என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications