'கருப்பர்களுக்கு அனுமதியில்லை'... சர்ச்சை போஸ்டரால் இழுத்து மூடப்பட்ட சீன மெக்டோனால்ட் கிளை!
பீஜிங்: கருப்பின மக்களை அனுமதிக்க மாட்டோம் என அறிவிப்பு பலகை வைத்த விவகாரம் தொடர்பாக சீனாவில் உள்ள மெக்டோனால்ட்ஸ் ரெஸ்டாரண்ட் வருத்தம் தெரிவித்துள்ளது.
ஆப்ரிக்கர்கள் சீனாவில் குடியேறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு ஆப்ரிக்கர்களுக்கும், சீனர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது. அதுவும் சீனாவின் குவாங்சௌ நகரில் இந்த மோதல் அதிகம்.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் வெளிநாட்டினரை கண்டாலே சீனர்கள் மோதலில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் குவாங்சௌ நகரில் உள்ள ஒரு மெக்டோனால்ட் ரெஸ்டாரெண்டில், கருப்பு நிற மக்களுக்கு அனுமதி இல்லை என நோட்டீஸ் வைக்கப்பட்டது.
இதை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, மெக்டோனால்ட் நிறுவனத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக மெக்டோனால்ட் நிறுவனம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Recommended Video
இதையடுத்து மெக்டோனால்ட் நிறுவனம் இந்த அறிவிப்பு தொடர்பாக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட மெக்டோனால்ட் கிளையை நிரந்தரமாக மூடுவதாகவும் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
