சீனாவை டென்ஷனாக்கிய வங்கதேசம்.. உண்மை கூறியும் பணிந்த முகமது யூனுஸ்.. பின்னணியில் அருணாச்சல பிரதேசம்
டாக்கா: வங்கதேசத்தின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 2 தகவல்கள் சீனாவை டென்ஷனாக்கி உள்ளது. இதனை மாற்றம் செய்ய சீனா கூறிய நிலையில் வங்கதேசம் மறுத்துவிட்டது. புத்தகங்கள் அச்சடித்து முடிக்கப்பட்டுவிட்டது. இனி மாற்ற முடியாது என்று கூறியுள்ளதால் வங்கதேசம் மீது சீனா கடும் கோபமடைந்துள்ளது. அதேவேளையில் உண்மையை சொன்னால் சீனா ஏன்? கோபப்படுகிறது என்கிறது வங்கதேசம். அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
அண்டை நாடான வங்கதேசம் நம்மை சீண்டி வருகிறது. ஷேக் ஹசீனா ஆட்சி மாற்றத்துக்கு பிறகு வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. இந்த இடைக்கால அரசு நம் நாட்டை எதிரியாக பார்க்க தொடங்கி உள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான், சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது.

குறிப்பாக சீனாவை விட பாகிஸ்தானிடம் தான் வங்கதேசம் நட்பு பாராட்டி வருகிறது. இந்நிலையில் தான் வங்கதேசத்தின் ஒரு செயல் தற்போது சீனாவை கடும் டென்ஷனாக்கி உள்ளது. அதுமட்டுமின்றி சீனாவின் எதிர்ப்பை வங்கதேசம் சம்பாதித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் வங்கதேச நாட்டின் நில அளவீட்டு துறையில் (சர்வே துறை) இணையதளத்தில் பயன்படுத்தப்படும் மேப்பும், அந்த நாட்டில் அச்சடிக்கப்பட்ட புத்தகமும் தான் காரணம். புரியும்படி கூற வேண்டும் என்றால் அருணாச்சல பிரதேசம் நம் நாட்டுக்கு சொந்தமானது. அதேபோல் அக்சாய் சின் என்பது லடாக்கில் அமைந்துள்ளது. இதுவும் நம் நாட்டின் ஒருபகுதியாக உள்ளது. இந்த 2 இடங்களுக்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அதேபோல் ஹாங்காங் மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளை சீனா இன்னும் அங்கீகரிக்காமல் உள்ளது. அந்த 2 நாடுகளும் சீனாவின் ஒருபகுதியாகவே கூறி வருகிறார்.
இப்படியான சூழலில் தான் வங்கதேசத்தின் நில அளவீட்டு துறை இணையதளத்தில் பயன்படுத்தப்பட்ட மேப்பில் அருணாச்சல பிரதேசம், அக்சாய் சின் உள்ளிட்டவை இந்தியாவுக்கு சொந்தம் எனவும், ஹாங்காங் மற்றும் தைவான் உள்ளிட்டவை தனி நாடுகள் என்றும் உள்ளது. இது சீனாவை டென்ஷனாக்கியது. அதேபோல் வங்கதேசத்தின் 4ம்வகுப்பு புத்தகத்தில் ஆசியா பிராந்தியத்தை குறிக்கும் வகையிலான மேப்பிலும் அருணாச்சல பிரதேசம், அக்சாய் சின் இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகத்தில் ஹாங்காங், தைவான் தனி நாடுகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் கண்சிவந்த சீனாவின் ஜி ஜின்பிங் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வங்கதேசத்துக்கு பிரஷர் கொடுக்க தொடங்கினார். உடனடியாக இந்த தகவல்களை மாற்ற வேண்டும் என்று சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் வங்கதேச கல்வி அமைச்சகம் மற்றும் தேசிய பாடத்திட்டம் - பாடநூல் வாரியத்திடம் தகவல் தெரிவித்து மாற்றம் செய்ய கோரியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத வங்கதேசம் உடனே சீனாவிடம் பணிந்தது.
அதுமட்டுமின்றி, ‛‛புத்தகத்தில் இடம்பெற்ற தகவல்களை மாற்றம் செய்யும்படி பிரஷர் கொடுக்காதீங்க.. இப்போது அனைத்து புத்தகங்களும் அச்சிடும் பணி என்பது முடிந்துவிட்டது. இனி அதில் திருத்தம் செய்ய முடியாது. புதிதாக புத்தகங்கள் அச்சிட வேண்டும் என்றால் அதிக நிதி செலவாகும். இதனால் இந்த தகவல்களை மாற்றம் செய்ய பிரஷர் செய்யாதீங்க. வரும்காலத்தில் நாங்கள் மாற்றி விடுகிறோம்'' என்று வங்கதேசம் சார்பில் சீனாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications