இந்த பக்கம் இந்தியாவுடன் சண்டை போட்ட நேபாளம்.. அந்த பக்கம் கிராமத்தை ஆட்டையை போட்ட சீனா
காத்மாண்டு: இந்த பக்கம் இந்தியாவிடம் எல்லை பிரச்சனைக்காக நேபாளம் சண்டை போட்டுக்கொண்டிருந்த கேப்பில் அந்த பக்கம் சீனா, நேபாளத்தின் ஒரு கிராமத்தை ஆக்கிரமித்துவிட்டது. இந்த விஷயத்தில் அந்நாட்டு அதிகாரிகளின் அலட்சியம் குறித்து நேபாள பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டு நாறடித்து வருகின்றன.
Recommended Video
நேபாளத்தில் உள்ள எல்லாரிடமும் இந்தியா தங்கள் பகுதியை ஆக்கிரமித்துவிட்டதாக அந்நாட்டு அரசு விஷமமான கருத்துக்களை வேகமாக பரப்பி வருகிறது.இந்தியாவுக்கு எதிராக மக்களை திசை திருப்புவதில் அந்த ஊர் அரசியல்வாதிகள் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கலபாணி, லிபுலேக், லிம்பியாதுரா போன்ற பகுதிகள் தங்களுக்கு சொந்தம் என்றும் அதை இந்தியா ஆக்கிரமித்ததாகக் கூறி வரை படத்தை நேபாளம் அண்மையில் வெளியிட்டது. ஆனால் இந்த பக்கம் நிலத்திற்காக சண்டை போட்டுக் கொண்டு இருக்கும் நேபாளம் தெற்கு பக்கத்தில் ஒரு கிராமத்தையே சீனாவிடம் இழந்துவிட்டது.

திபெத் உடன் இணைப்பு
சீனா நேபாளத்தின் கோர்க்கா மாவட்டத்தில் உள்ள ரூய் கிராமத்தை ஆக்கிரமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கிராமம் இப்போது சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான திபெத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நேபாளத்தை தளமாகக் கொண்ட செய்தித்தாள் கபார்ஹப் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. நேபாளத்தின் பிரதமர் கே.பி. சர்மா ஓலி இந்தியாவைப் பற்றிய ஆக்ரோஷமான நிலைப்பாடு கொண்டு இருக்கும் அதேவேளையில், தனது சொந்த பிரதேசத்தில் ஒரு கிராமத்தையே சீனா அபேஸ் செய்ததை தட்டிகேட்கவில்லை.

ரூய் கிராமம்
ரூய் இன்னும் நேபாள வரைபடத்தில் சேர்க்கப்பட்டிருந்தாலும், சீனா தனது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த எல்லை தூண்களை அகற்றியுள்ளது என்று கபார்ஹப் பத்திரிக்கை கூறுகிறது. சுமார் 72 வீடுகளைக் கொண்ட ருய் கிராமம் நேபாள அரசாங்கம் மற்றும் அதன் அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் அக்கறையின்மை காரணமாக ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நில வருவாய் அலுவலகம் கோர்கா, ரூய் கிராமத்தில் வசிப்பவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வருவாயைப் பதிவு செய்துள்ளது. நில வருவாய் அலுவலகத்தில் கோப்பு முதலிடத்தில் பதிவுகள் இன்னும் பாதுகாக்கப்பட்டுள்ளன என்று கபார்ஹப் பத்திரிக்கை தெரிவித்துள்ளது..

அதிகாரிகள் அலட்சியம்
வரலாற்றாசிரியர் ரமேஷ் துங்கலின் கூற்றுப்படி, கோர்கா மாவட்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ருய் மற்றும் டீகா ஆகிய இரு கிராமங்களும் எல்லைத் தூண்களை சரிசெய்வதில் நேபாள அதிகாரிகளின் அலட்சியத்தால் இழக்கப்பட்டுள்ளன. ரூய் நேபாளத்தால் போரில் இழக்கப்படவில்லை அல்லது திபெத்துடனான எந்தவொரு சிறப்பு உடன்படிக்கைக்கும் உட்பட்டது அல்ல. இந்தியாவின் எல்லையை பற்றியே அங்குள்ளோர் சிந்தித்து கொண்டிருந்தார்கள். எனவே, இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினைகள் அங்குள்ள அனைவருக்கும் தெரியும், ஆனால் திபெத்துடனான வடக்கு எல்லையில் நேபாளத்தின் நிலைமை மிகவும் மோசமானது' என்றார்.

நேபாள அரசுக்கு வரி
சுமுபாரி கிராமப்புற வார்டு எண் 1 இன் தலைவர் பிர் பகதூர் லாமா, ரூய் மக்கள் தங்கள் நில வருவாயில் ஒரு பகுதியை நேபாள அரசுக்கு வரியாக செலுத்தி இருந்தாலும் சீனாவின் அத்துமீறலைத் தொடர்ந்து அவர்கள் திபெத்தியர்களாக மாறிவிட்டனர் என்று ஒப்புக் கொண்டார். சம்தோ மற்றும் ருய் கிராமத்திற்கு இடையேயான எல்லையாக 35 தூண் எண் வரையறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தூணின் மறுசீரமைப்பு பணியின் போது எண். 35, நேபாள அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, இந்த கிராமம் சீன ஆக்கிரமிப்பின் கீழ் வந்துள்ளது என்று கபார்ஹப் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications