அதிகரிக்கும் காற்று மாசுபாடு: 2,100 தொழிற்சாலைகளின் உற்பத்தியை நிறுத்த உத்தரவிட்டது சீனா !
பெய்ஜிங்: சீனாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுக்குள் கொண்டுவர 2,100 தொழிற்சாலைகளின் உற்பத்தியை நிறுத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் காற்று மாசுபாடு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள காரணத்தால் அங்கு அண்மையில் இரண்டாவது முறையாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. அப்போது கார்களை இயக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர், அவை விலக்கி கொள்ளப்பட்டன. இதையடுத்து 2,100 தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காற்று மாசுபாடு காரணமாக 3-வது நாளாக காற்றில் நச்சு கலந்து பனிப்புகை நிலவுகிறது. கடந்த சனிக்கிழமை முதல் இந்த சூழ்நிலையை சமாளிக்க தலைநகர் பெய்ஜிங்கில் இரண்டாவது முறையாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 2,100 தொழிற்சாலைகளில் நடைபெறும் உற்பத்தியை குறைக்கவும், சில தொழிற்சாலைகளில் முற்றிலுமாக நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சீனாவின் கிழக்கு மற்றும் மத்திய சீனாவின் பீஜிங் உட்பட 33 நகரங்களில் பனிப்புகை சூழ்ந்துள்ளது. இதை 30 சதவீதம் வரை குறைப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாக நகரின் சுற்றுச் சூழல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டினால், ஆண்டுக்கு 15 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஒரு ஆய்வுத்தகவல் கூறுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 4,400 பேர் உயிரிழக்கின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications