Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உற்று பார்க்கும் டிரம்ப்.. கைகோர்க்கும் "டிராகன்- யானை.." இனி தான் ஆட்டமே இருக்கு! ஏன் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவில் இப்போது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டிற்கு நடுவே பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறிய சில கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. டிரம்ப் வரியால் உலகளவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க இப்போது சீனா சென்றுள்ளார். பிரதமர் மோடி கடந்த 7 ஆண்டுகளில் சீனா செல்வது இதுவே முதல்முறையாகும். இதற்கிடையே இன்றைய தினம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

China President Xi Jinping Calls India China Friendship Right Choice at SCO Summit Amid Trump tariff

ஜி ஜின்பிங்

அப்போது பேசிய ஜி ஜின்பிங் இந்தியாவும் சீனாவும் நண்பர்களாக இருப்பதே சரியானது என்றும் இரு நாடுகளும் பண்டைய நாகரிகங்களைக் கொண்ட நாடுகள் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜி ஜின்பிங் மேலும் பேசுகையில், "உங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ஷாங்காய் உச்சி மாநாட்டிற்காகச் சீனாவுக்கு உங்களை வரவேற்கிறேன்.

அதிக மக்கள்தொகை

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் நாம். மேலும், தெற்கு ஆசிய நாடுகளின் முக்கியமான நாடுகள் நாம். இரு நாட்டு மக்களின் நலனை மேம்படுத்துதல், வளரும் நாடுகளின் ஒற்றுமை, மனிதச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தல் ஆகிய வரலாற்றுப் பொறுப்புகள் நம் இருவருக்கும் உண்டு. இரு நாடுகளும் நல்ல அண்டை நாடுகளாகவும், இணக்கமான உறவுகளையும் கொண்ட நண்பர்களாக இருப்பது அவசியம். ஒருவருக்கொருவர் வெற்றிக்கு வழி வகுக்க உதவ வேண்டும். டிராகனும் யானையும் ஒன்றிணைவது என்பதே சரியான தேர்வு" என்றார்.

சீனா இந்தியா ராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவைச் சுட்டிக்காட்டிய அவர், "இரு நாடுகளும் தங்கள் உறவை ஒரு நீண்டகாலக் கண்ணோட்டத்தில் கையாள வேண்டும். பன்முகத்தன்மை, ஜனநாயகம் ஆகியவற்றை நிலைநிறுத்த நாம் வரலாற்றுப் பொறுப்புகளை ஏற்க வேண்டும். ஆசியா மற்றும் உலகம் முழுவதும் அமைதி மற்றும் செழிப்புக்காக இணைந்து செயல்பட வேண்டும்" என்றார்.

பிரதமர் மோடி

அதேபோல பிரதமர் மோடி தனது தொடக்க உரையில், "இந்தியா சீனா உறவுகளைப் பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் உணர்திறன் அடிப்படையில் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன். கடந்த ஆண்டு கசனில், மிகவும் முக்கியமான ஆலோசனைகள் நடைபெற்றன. அவை இரு நாட்டு உறவுகளை மேம்படுத்த முக்கியமானதாக இருக்கிறது.. எல்லையில் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னர், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான சூழல் உருவாகியுள்ளது" என்றார்.

ரொம்ப முக்கியம்

தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின் இடையே 50 நிமிடங்களுக்கும் மேலாகப் பிரதமர் மோடியும் ஜி ஜின்பிங்கும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. டிரம்ப் இப்போது உலக நாடுகள் மீது இஷ்டத்திற்கு வரிகளை விதித்து வருகிறார். குறிப்பாக இந்தியா மீது 50% வரி விதித்துள்ளார். இதனால் இரு நாட்டு உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் பிரதமர் மோடி சீன அதிபரைச் சந்தித்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மறுபுறம் இந்தியா சீனா இடையேயான உறவு கல்வான் மோதலுக்குப் பிறகு மோசமாக இருந்தது.

ஆனால், கடந்தாண்டு கசனில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசிய பிறகு நிலைமை மெல்லச் சீராகி வந்தது. குறிப்பாக டிரம்ப் வரிக்குப் பிறகு இரு நாட்டு உறவு பல மடங்கு மேம்பட்டுவிட்டது. இந்தச் சூழலில் சீன அதிபர் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் எனச் சொல்லியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+