திடீரென மாயமான ஜி ஜின்பிங்.. சீனாவில் விரைவில் புதிய அதிபர் தேர்வு? என்ன நடக்குது? பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் திடீரென்று மாயமாகி உள்ளார். சீனாவை எடுத்து கொண்டால் அதிபர்கள் திடீரென்று மாயமாவதும், அதன்பிறகு புதிய அதிபர் பொறுப்பேற்பதும் நடந்துள்ளது. இதனால் சீனாவின் ஜி ஜின்பிங்கின் ஆட்சி முடிவுக்கு வருகிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை இது நடக்கும் பட்சத்தில் ஜி ஜின்பிங்கிற்கு பிறகு சீனாவின் அதிபராக பொறுப்பேற்க உள்ளவர்கள் குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீன அதிபராக ஜி ஜின்பிங் உள்ளார். இவர் கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி இந்த பொறுப்பை ஏற்றார். சீனாவில் அதிபர் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். 2013ம் ஆண்டை தொடர்ந்து 2018 ல் 2வது முறையாக ஜி ஜின்பிங் அதிபரானார். கடந்த 2023ல் 3வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து வருகிறது. இவரது பதவிக்காலம் 2028 மார்ச் மாதம் வரை உள்ளது.

xi jinping china

ஜி ஜின்பிங் தான் தற்போது சிசிபி என அழைக்கப்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும், மத்திய ராணுவ கமிஷனின் தலைவராகவும் உள்ளார். சீனாவை எடுத்து கொண்டால் ஒற்றை கட்சி முறை ஆட்சி கொள்கையை கொண்டுள்ளது. சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சி தான் பெரிய கட்சியாக உள்ளது. இதன் கீழ் தான் பிற 7 அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் தான் அதிபர் பதவியில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தான் சீன அதிபராக உள்ள ஜி ஜின்பிங் அடிக்கடி மாயமாகி விடுகிறார். கடந்த மே 21ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி வரை 2 வாரம் அவர் திடீரென்று மாயமானார். அவர் பொதுமக்கள் முன்போக, தொலைக்காட்சியிலோ தோன்றவில்லை. செய்தித்தாள்களிலும் அவரை பற்றிய செய்திகள் வரவில்லை. அதன்பிறகு பொதுவெளியில் அவர் தோன்றினாலும் கூட ஆக்டிவ்வாக இல்லை. சோகத்துடன் இருந்தார்.

இருப்பினும் அவர் எங்கு சென்றார் ? என்பது பற்றிய விவரம் வெளியாகவில்லை. இப்போது மீண்டும் அவர மிஸ்ஸாகிறார். வரும் 6 மற்றும் 7 ம் தேதிகளில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு பிரேசிலில் நடைபெற உள்ளது. இதில் நம் நாட்டை போல் சீனாவும் உறுப்பினராக உள்ளார். நம் நாட்டின் சார்பில் பிரதமர் மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். ஆனால் சீனா தரப்பில் ஜி ஜின்பிங் சார்பில் அந்த மாநாட்டில் பங்கேற்க போவது இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் இது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. ஏனென்றால் ஜி ஜின்பிங் சீன அதிபராக பிரிக்ஸ் உச்சிமாநாட்டை முதல் முறையாக புறக்கணிக்கிறார்.

முன்னதாக ஜி ஜின்பிங்கிற்கு நெருக்கமான ஜெனரல்கள் பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டனர். இதனால் ஜி ஜின்பிங்கின் பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின. தற்போது அவர் திடீரென்று மாயமாகி உள்ளார். அதுமட்டுமின்றி ஜி ஜின்பிங்கின் திடீர் மாயம் என்பது அந்த நாட்டில் அதிகார மாற்றத்தை குறிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் முந்தைய காலங்களில் நடந்த இதுபோன்ற சம்பவங்கள் தான்.

அதாவது ஜி ஜின்பிங்கிற்கு முன்பு சீனாவின் அதிபராக இருந்தவர் ஹூ ஜிண்டோ ( Hu Jintao). இவரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் தான். இவர் 2003ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை அதிபராக செயல்பட்டார். அவரை பதவியில் இருந்த கட்சி முடிவு செய்யப்பட்டது. இதனால் அவருக்கான முக்கியத்துவம் தொடர்ந்து குறைக்கப்பட்டது. அவரை பற்றிய செய்திகள் வெளியாகாமல் இருந்தது. ஹூ ஜிண்டோவும் மாயமானதாக தகவல்கள் பரவின.

அதன்பிறகு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது விழாவில் அவர் வெளியேற்றப்பட்டார். ஹூ ஜிண்டோவின் அருகே இருந்த ஜி ஜின்பிங் அமைதியாக இருந்தார். ஹூ ஜிண்டோ, ஜி ஜின்பிங்கிடம் பேச முயன்றும் அது பலனளிக்கவில்லை. ஹூ ஜிண்டோ அதிபர் பதவியில் இருந்து இறக்கிய உடனேயே ஜி ஜின்பிங் சீனாவின் அதிபராக பொறுப்பேற்றார். இதனால் தற்போது ஜி ஜின்பிங் சீன அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி ஜி ஜின்பிங் இல்லாத சூழலில் சீனாவை கட்டுப்படுவத்துவது யார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. அதன்படி பார்த்தால் மத்திய ராணுவ ஆணையத்தின் முதல் துணைத் தலைவரான ஜெனரல் ஜாங் யூசியா தான் தற்போது அந்த நாட்டை கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது சீனாவில் 24 உறுப்பினர்களை கொண்ட அதிகாரம் படைத்த பொலிட்பீரோவின் ஒரு பகுதியாக இருக்கும் ஜாங் யூசியா உள்ளார். இவருக்கு முன்னாள் சீன அதிபர் ஹு ஜிண்டாவோவுக்கு விசுவாசமான மூத்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரித்து வருவதாக கூறப்படுகிறது

இதுதவிர ஜி ஜின்பிங் ஒருவேளை அதிபர் பதவியில் இருந்து இறக்கப்பட்டால் அவருக்கு பதிலாக வாங்க் யங் அதிபராக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் யார் என்றால் டெக்னோகிராப்ட். 2023 தேர்தலையொட்டி 2022ம் ஆண்டில் அதிபர் பதவிக்கு போட்டியிட தயாராக இருந்தார். இதனால் அவரது பெயர் முன்னிலையில் உள்ளதாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

சீனாவில் தற்போது நடக்கும் இந்த குளறுபடியால் இந்தியா மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதுதொடர்பாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகையில், ‛‛ சீனாவை எடுத்து கொண்டால் ஒரு விஷயத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. உள்நாட்டில் ஏதேனும் பிரச்சனைகள், பூசல்கள் இருந்தால் அதனை மூடி மறைக்க வெளிநாட்டு விவகாரங்களை கையில் எடுக்கும். தற்போது ஜி ஜின்பிங் தொடர்பான பல்வேறு யூகங்கள் வந்துள்ளதால் இந்தியா கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் கட்சி பிரச்சனையை மறைக்க சீனா எல்லை பிரச்சனையை தூண்டலாம். 2012, 2020ம் ஆண்டுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதுமட்டுமின்றி சீனா சீனா சைபர் தாக்குதல்களை அதிகரிக்கலாம். இந்தியாவில் பிரச்சினைகளை உருவாக்க சதிவேலைகளில் இறங்கலாம். இதனால் இந்தியா கவனமாக இருக்க வேண்டிய சமயம் இது'' என்று வார்னிங் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+