இரண்டு அல்ல.. இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி.. குடும்ப கட்டுப்பாடு விதியை தளர்த்தியது சீனா!
பெய்ஜிங்: சீனாவில் சர்ச்சைக்குரிய 2 குழந்தை கட்டுப்பாடு திட்டம் முடிவிற்கு வந்துள்ளது, அங்கு மக்கள் இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. 140 கோடி பேர் சீனாவில் உள்ளனர். இந்த நிலையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில் சீனாவில் குடும்ப கட்டுப்பாட்டு முறை அமலில் உள்ளது.
அதன்படி ஒவ்வொரு தம்பதியும் 2 குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் பெற்றுக்கொண்டால் அபராதம் விதிக்கப்படும். அதேபோல் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அவர்கள் அரசு திட்டங்கள் மூலம் பலன் பெற முடியாது.

விமர்சனம்
இந்த திட்டம் விமர்சனத்தை சந்தித்தாலும் மிக கடுமையாக இது பின்பற்றப்பட்டது. ஆனால் இந்த திட்டம் காரணமாக சீனாவின் மக்கள் தொகையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி மிகப்பெரிய சரிவை சந்தித்தால் இந்த திட்டத்தை தற்போது சீனா கைவிட்டுள்ளது.

கைவிட்டது
சீனா இது தொடர்பாக எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்கள் தொகை தொகை வளர்ச்சி சரிவை சந்தித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்தே தற்போது சீனாவில் 2 குழந்தை கட்டுப்பாடு திட்டம் முடிவிற்கு வந்துள்ளது, அங்கு மக்கள் இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்செஸ்
2020ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் இந்த சரிவு கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வருடம் 12 மில்லியன் குழந்தைகள் சீனாவில் பிறந்துள்ளன. இது 2016ல் பிறந்த 18 மில்லியன் குழந்தைகளை விட குறைவு. 1960க்கு பின் குழந்தைகள் பிறப்பில் இதுதான் பெரிய சரிவு.

ஜப்பான்
இதே நிலை சென்றால் சீனாவில் சில வருடங்களில் இளைஞர்கள் இல்லாமல் முதியவர்கள்தான் அதிகம் இருப்பார்கள். ஜப்பானில் தற்போது தொழில்களை, கடினமா வேலைகளை, உடல் வேலைகளை செய்ய ஆட்கள் இல்லை. அங்கு இளைஞர்களை விட, முதியர்கள் அதிகம் உள்ளனர். அதே நிலை சீனாவிலும் ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனால் சீனா விதியை தளர்த்தி உள்ளது.

ஆனால்
ஆனால் இது சீனாவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை. சீனாவில் மக்களிடையே குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் விருப்பம் குறைந்துவிட்டது என்கிறார்கள். தொடர் கட்டுப்பாடுகள் காரணமாகவும், மக்கள் குறைந்த குழந்தைகளை பெற்றுக்கொள்ள பழக்கப்பட்டுவிட்டதாலும், இந்த தளர்வு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துத்தாது என்கிறார்கள்.

முன்பு
இதற்கு முன் 1979-2016 வரை சீனாவில் ஒற்றை குழந்தை கட்டுப்பாடு இருந்தது. ஒரு குழந்தைக்கும் மேல் அதிகமாக பெற்றுக்கொண்டால் அபராதம், கட்டாய கருக்கலைப்பு, வேலைவாய்ப்பு வழங்கப்படாது உள்ளிட்ட கடுமையான விதிகள் இருந்தன. இதனால் சீனாவின் மக்கள் தொகை பெரிய அளவில் சரிந்தது. இதையடுத்து 2016ல் இந்த விதி தளர்த்தப்பட்டு 2 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டது.

சிக்கல்
தற்போது மூன்று குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை குழந்தை பிறப்பு சதவிகிதம் குறைவாக இருந்தது. இதனால் அடுத்த 10-20 வருடங்கள் கழித்து சீனாவில் இளைஞர்கள் மிகவும் குறைவாக இருக்கும் சூழ்நிலை ஏற்படும். அந்த நாட்டின் வளர்ச்சியை இது பெரிய அளவில் பாதிக்கும்.












Click it and Unblock the Notifications