புதிய எய்ட்ஸ் நோயாளிகள்: இந்தியாவில் 1.16 லட்சம்; சீனாவில் 70 ஆயிரம்
பீஜிங்: இந்தியாவில் கடந்த ஆண்டு 1.16 லட்சம் புதியவர்களுக்கு எய்ட்ஸ் நோய் தாக்கியுள்ளது. சீனாவில் கடந்த 9 மாதங்களில் மட்டும் சுமார் 70 ஆயிரம் புதியவர்களுக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
உலக எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே சர்வதேச எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988-ல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

கொல்லும் கொடூர நோய்
1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லட்சங்களுக்கு மேல். 2007-ஆம் ஆண்டு வரை 332 லட்சம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதப்படுகிறது

உலக சுகாதார அமைப்பு
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எய்ட்ஸ்க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம். கடந்த 25 ஆண்டுகளாக டிசம்பர் 1ம் தேதியை உலக நாடுகள் எய்ட்ஸ் தினமாக கடைபிடித்து வருகின்றன.

குழந்தைகளும் பாதிப்பு
சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லட்சம் உயிரிழப்பு ஏற்பட்டது. இதில் 2,70,000 குழந்தைகள்.

இந்தியாவில் 1.16 லட்சம் எய்ட்ஸ்
இந்தியாவில் 2011ம் ஆண்டு 1.48 லட்சம் மக்கள் எய்ட்ஸ் நோய் பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவாக 1,11,663 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு 1.16 லட்சம் புதிய எய்ட்ஸ் நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 14,500 பேர் குழந்தைகள்.

சீனாவில் புதிய நோயாளிகள்
இந்நிலையில், மக்கள் தொகையில் உலகின் பெரிய நாடாக விளங்கும் சீனாவில் கடந்த 9 மாதங்களில் மட்டும் சுமார் 70 ஆயிரம் புதியவர்களுக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

4,34000 எய்ட்ஸ் நோயாளிகள்
சீனாவில் உள்ள 31 மாகாணங்களிலும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் தற்போது 2 லட்சத்து 9 ஆயிரம் பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்று சீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications