பறந்த 26 போன் கால்கள்.. பாகிஸ்தான் வெறும் 'முகமூடி' தான்.. அமெரிக்கா- ஈரான் போரில் சீனா ஆடிய கேம்
பெய்ஜிங்: அமெரிக்கா ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ததாக அவர்களே அறிவித்துக் கொண்டார்கள். ஆனால், உண்மையில் இதில் பின்னணியில் இருப்பதே சீனாதாம். இது தொடர்பாக மொத்தம் 25 போன் கால்கள் பறந்த நிலையில், அதைத் தொடர்ந்தே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
அமெரிக்காவும் ஈரானும் நேருக்கு நேர் மோதிக்கொண்டிருந்த அந்தப் பதற்றமான சூழலில், உலகமே ஒரு பேரழிவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. டிரம்ப் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வந்தார். ஒரு கட்டத்தில் அந்த நாகரிகமே அழியும் என்ற ரேஞ்சுக்கு பேசினார். மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதோ என்ற அச்சத்தையே இது ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில் தான் சரியாக டிரம்பின் டெட்லைன் முடிவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னால் ஒரு ட்விஸ்ட் நடந்தது. அதுதான் அந்த 15 நாள் போர் நிறுத்தம்! இந்த 'மேஜிக்' எப்படி நடந்தது? உலக அரங்கில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது போலத் தோன்றினாலும், திரைமறைவில் இருந்து காய் நகர்த்தியது என்னவோ சீனா என்கிறார்கள்.
அந்த 26 போன் கால்கள்
நிலைமை கையைவிட்டுப் போகக்கூடாது எப்படியாவது போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதில் சீனா உறுதியாக இருந்துள்ளது. இதனால் இந்த முறை சீனா மிகப் பெரிய ஒரு சைலண்ட் கேம் ஆடியிருக்கிறது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இந்தப் போர் பதற்றம் தொடங்கியதிலிருந்து சுமார் 26 முறை முக்கிய தலைவர்களுடன் போனில் பேசியிருக்கிறார். ஈரான், இஸ்ரேல், ரஷ்யா மற்றும் வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கு அவர் கால் செய்து தனிப்பட்ட முறையில் பேசியுள்ளார்.
சீனா
இந்த 26 கால்களும் வெறும் நலம் விசாரிப்புகள் அல்ல.. ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதற்கான சீனாவின் முயற்சி!. "சண்டை வேண்டாம்.. பேச்சுவார்த்தை தான் தீர்வு" என்பதை ஒவ்வொரு கால் மூலமும் அழுத்தமாகச் சொல்லியுள்ளார். அதன் பிறகே இந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. அதாவது இந்தச் சமாதான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானின் பங்குதான் வெளியில் தெரிந்தது என்றாலும் ரியல் கேம் சேஞ்சர் சீனா தான். பாகிஸ்தான் ஒரு மீடியேட்டராக செயல்பட்டது என்றாலும் அதன் பின்னணியில் இருந்தது சீனாவின் அறிவுறுத்தல் என்கிறார்கள்!
என்ன நடக்கிறது
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் நேரடியாகப் பேச வாய்ப்பில்லை.. சீனாவுக்கும் அமெரிக்கா வராது. இதன் காரணமாகவே ஒரு நியூட்ரல் இடமாகப் பாகிஸ்தானை டிக் அடித்துள்ளது சீனா.. ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பதே லட்சியமாகக் கொண்டு சீனா இதைத் திட்டமிட்டுச் செய்துள்ளது.. சீனா உதவியதா என்று கேட்டதற்கு டிரம்ப் கூட ஒரு பேட்டியில், "ஆம், அவர்கள் உதவினார்கள்" என்று ஒப்புக்கொண்டார். ஆனாலும், சீனா அடக்கி வாசிக்கிறது. அதற்குப் பின்னாலும் சில காரணங்கள் உண்டு.
அமைதியாக இருக்க என்ன காரணம்!
அதாவது இந்த போர் நிறுத்தம் என்பது நிரந்தரம் இல்லை.. இப்போது 15 நாள் தற்காலிக போர் நிறுத்தம் மட்டுமே போடப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த 15 நாள் போர் நிறுத்தம் தோல்வியில் முடிந்தால், அந்தப் பழி தன் மீது வரக்கூடாது என்பதில் சீனா தெளிவாக இருக்கிறது. இதனால் தான் அடக்கி வாசிக்கிறது. மேலும், ஈரான் மீது அதிக அழுத்தம் கொடுத்தது தெரிந்தால், தன் நெருங்கிய நட்பு நாடு சங்கடப்படும் என்பதால் "நாங்களும் எங்களால் முடிந்த முயற்சிகளைச் செய்தோம்" என்று சிம்பிளாக முடித்துக்கொண்டது சீனா.
சுருக்கமாகச் சொன்னால் டிரம்ப் டெட்லைன் கொடுத்தார், பாகிஸ்தான் மேடை அமைத்துக் கொடுத்தது.. ஆனால் பின்னணியில் இருந்து அந்த 26 கால்கள் மூலம் காய் நகர்த்தியது என்னவோ சீனாதான். !












Click it and Unblock the Notifications