இரட்டை குழல் துப்பாக்கி.. அமெரிக்காவுக்கு எதிராக சீனா எடுத்த ஆயுதம்! மிரண்ட டிரம்ப்
பெய்ஜிங்: தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா விதித்த 54% வரியை திரும்ப பெற சீனா வலியுறுத்தி இருந்தது. ஆனால் டிரம்ப் மறுத்துவிட்டார். எனவே அமெரிக்க பொருட்களுக்கு சீனாவும் 34% வரியை விதித்தது. மட்டுமல்லாது இரண்டு வகையில் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை சீனா எடுத்திருக்கிறது. இது அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஒன்று அமெரிக்காவிலிருந்து செயல்படும் ஹாலிவுட் திரைப்படங்களை சீனாவில் தடை செய்வது. இரண்டாவது அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாகும் வேளாண் பொருட்களையும் தடை செய்வது.

ஹாலிவுட் படங்கள்
இந்த இரட்டை தாக்குதல் நிச்சயம் அமெரிக்காவை நிலை குலைய செய்யும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதாவது சீனாவின் திரைப்பட சந்தை உலகின் இரண்டாவது பெரிய சந்தையாகும். கடந்த 2023ம் ஆண்டை எடுத்துக்கொண்டால், சீனாவின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வருமானம் 7.75 பில்லியன் அமெரிக்க டாலர். இதில் பெரும்பாலும் கோலோச்சியது சீன திரைப்படங்கள்தான். சீன திரைப்படங்கள் 83.77 சதவிகிதமும், மீதம் ஹாலிவுட் திரைப்படங்களும் கல்லா கட்டின.
Zootopia திரைப்படம்
ஹாலிவுட் படங்களின் பங்கு குறைவாக இருந்தாலும், அதன் மூலம் வரும் வருமானம் அதிகம். எனவே சீன சந்தை ஹாலிவுட் துறைக்கு முக்கியமானது. 2023ம் ஆண்டு மட்டும் 1.26 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஹாலிவுட் வருமானம் பார்த்திருக்கிறது. இது தவிர சில குறிப்பிட்ட ஹாலிவுட் படங்கள் சீனாவில் மிக நன்றாகவே ஓடியிருக்கிறது. குறிப்பாக 'Zootopia' எனும் ஹாலிவுட் திரைப்படம் சீனாவில் மட்டும் 235.6 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்தது. இந்த சந்தையை ஹாலிவுட் நிச்சயம் விட்டுக்கொடுக்காது.
ஹாலிவுட்டின் அழுத்தம்
குறிப்பாக ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள் இது பற்றி டிரம்ப்புக்கு நிச்சயம் அழுத்தம் கொடுப்பார்கள். இது அமெரிக்காவின் வரி விதிப்பில் மாற்றத்தை ஏற்படுத்த தூண்டும்.
மற்றொருபுறம் அமெரிக்காவிலிருந்து தங்கள் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் வேளாண் பொருட்களுக்கும் சீனா தடையை அறிவித்திருக்கிறது. சீனா, அமெரிக்காவின் மிகப்பெரிய விவசாய பொருட்கள் ஏற்றுமதி சந்தையாக உள்ளது. அந்த வகையில் இத்தடை அமெரிக்காவை கடுமையாக பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.
வேளாண் விஷயத்தில் கை வைத்த சீனா
USDA-வின் வெளிநாட்டு வேளாண் சேவை அமைப்பின் தரவுகளின்படி, 2022 ஆம் நிதியாண்டில், அமெரிக்கா சீனாவுக்கு 36.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்தது. இது முந்தைய ஆண்டை விட அதிகமாகும். 2023ம் ஆண்டை பொறுத்தவரை அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் வேளாண் பொருட்களில் 17% சீனாவுக்குதான் சென்றது.
சீனாவின் பதிலடி
தற்போது வரி காரணமாக சோயாபீன்ஸ், சோர்கம் (ஒரு வகை சோளம்), கோழி, பன்றி மற்றும் மாட்டிறைச்சி, உலர் திராட்சை போன்ற அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு சீனா கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. சீனாவில் அமெரிக்க பன்றிக்கறி 81% வரி மற்றும் மாடுக்கறி 56% வரி சந்திக்கிறது. இப்படியான வரிகள் அமெரிக்க விவசாயிகளை ஆத்திரமடைய செய்யும். ஏனெனில் வரி அதிகமாக இருந்தால் சீனாவில் விலையும் அதிகரிக்கும். எனவே அமெரிக்க தயாரிப்பு பொருட்களை யாரும் வாங்கமாட்டார்கள்.
அமெரிக்க விவசாயிகள்
இது வேளாண் பொருள் உற்பத்தியில் தேக்கத்தை ஏற்படுத்தும். டிமான்ட் குறையும்.. பதிலுக்கு விலையும் குறையும். அமெரிக்க விவசாயிகள் நஷ்டமடைவார்கள். இவர்களை தொடர்ந்து விவசாய கடன் கொடுக்கும் வங்கிகள், உரம், இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் நஷ்டமடையும். வியாபாரம் நடக்காது. வேளாண் துறையில் அதிரடியாக வேலைவாய்ப்புகள் குறைய தொடங்கும். இது அரசியல் அழுத்தங்களை ஏற்படுத்தும். அரசு இவர்களை சமாதானப்படுத்த மானியத்தை வழங்க வேண்டி வரும்.
விழி பிதுங்கும் டிரம்ப்
செலவை கட்டுப்படுத்த முயற்சித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அரசுக்கு இந்த நெருக்கடி மிகப்பெரிய தலைவலியாக மாறும். ஏற்கெனவே மற்ற நாடுகளிடமும் அமெரிக்கா வரியை விதித்திருக்கிறது. எனவே அமெரிக்காவின் வேளாண் பொருட்கள் எங்குமே விற்பனை ஆகாது. அப்படி ஆனாலும் சீனா அளவுக்கு பெரிய அளவில் விற்பனை ஆகாது. சீன மக்கள் தொகை அளவுக்கு இந்தியாவை தவிர வேறு எந்த நாடுகளும் மக்களை கொண்டிருக்கவில்லை.
இந்தியா மாற்றாக மாறுமா?
சரி இந்தியாவில் அமெரிக்கா தனது பொருட்களை விற்கலாமே! என்று உங்களுக்கு கேட்க தோன்றும். இதிலும் சிக்கல் இருக்கிறது. இந்திய மக்கள் சீன மக்களை போல தாராளமாக செலவு செய்பவர்கள் கிடையாது. ஏனெனில் இரு நாட்டு மக்களின் தனிநபர் வருமானத்திலும் வித்தியாசம் இருக்கிறது. சீன மக்கள் ஒவ்வொருவரும் தோராயமாக ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார்கள். ஆனால், இந்திய மக்களின் சராசரி ஆண்டு வருமானம் வெறும் ரூ.2 லட்சம்தான்.
வரவும் செலவும்
எனவே இந்திய மக்கள் மாதத்திற்கு அதிகபட்சமாக சராசரியாக ரூ.5,000 மட்டுமே செலவு செய்கிறார்கள். சீனாவில் ரூ.25,000 வரை செலவு செய்கிறார்கள். ஆக இந்திய மக்கள் அமெரிக்க தயாரிப்பு பொருட்களை வாங்க மாட்டார்கள். ரொம்ப காஸ்ட்லியாக இருக்கும். அமெரிக்காவுக்கு சீன சந்தையை போல வேறு ஒன்று கிடைக்காது. இதை தெரிந்துக்கொண்டுதான் சீனா சரியான செக்-ஐ வைத்திருக்கிறது.
இது தவிர சீனாவில் இயங்கும் அமெரிக்க நிறுவனங்களை கட்டுப்படுத்துவது, ஃபெண்டானில் விவகாரத்தில் ஒத்துழைப்பை மறுப்பது, அமெரிக்க நிறுவனங்களின் ஏற்றுமதி உரிமையை ரத்து செய்தல் என மேலும் சில நடவடிக்கைகளை சீனா எடுத்திருக்கிறது.
அமெரிக்க நிறுவனங்களை கட்டுப்படுத்துவது
அதாவது சீனாவில் சில வெளிநாட்டு நிறுவனங்கள், குறிப்பாக அமெரிக்கா நிறுவனங்கள் அதிக லாபம் பார்க்கின்றன. இந்த நிறுவனங்கள் தங்களின் 'அறிவுசார் உரிமையை' (Intellectual Property Rights - IPR) பாதுகாக்கின்றன.
1. காப்புரிமைகள் (Copyrights)
2. டிரேட் மார்க் உரிமைகள் (Trademarks)
3. கண்டுபிடிப்பு உரிமைகள் (Patents)
4. வர்த்தக ரகசியங்கள் (Trade secrets)
Apple, Microsoft, Qualcomm போன்ற நிறுவனங்கள் மேற்குறிப்பிட்ட உரிமைகளை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றன. ஏனெனில் சீனாவில் டூப்ளிகேட் தயாரிப்புகள் அதிகம்.
அமெரிக்க நிறுவனங்கள்
மறுபுறம் வெளிநாட்டு நிறுவனங்கள் அவ்வளவு எளிதில் IPR வாங்கிவிட முடியாது. அப்படியெனில் சீன நிறுவனங்களுடன் சேர்ந்துதான் செயல்பட வேண்டும். இப்படி செயல்படும்போது கடுமையான ஒப்பந்தங்கள் உருவாக்கப்படும். உதாரணத்திற்கு ஆப்பிள் நிறுவனத்தால் சீனாவில் IPR வாங்க முடியவில்லை எனில், அது Xiaomi உடன் இணைந்து செயல்படும். இதற்காக ஆப்பிள் தனது Face id டெக்னாலஜியை Xiaomiக்கு கொடுக்கும். Xiaomi இதை வாங்கி பயன்படுத்தலாம். ஆனால் அந்த தொழில்நுட்பத்தை அனாலைஸ் செய்து காபி செய்யக்கூடாது (No Reverse Engineering).
சீனாவின் ஆய்வு
சமீப காலமாக இப்படி டெக்னாலஜியை பகிர்தல் குறைந்திருக்கிறது. அப்படியெனில், அமெரிக்க நிறுவனங்கள் தடையின்றி IPR-ஐ வாங்கியுள்ளன என்று அர்த்தம். இது எப்படி சாத்தியம்? அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் IPR-ஐ சீனாவில் எப்படி பெறுகின்றன? பாதுகாக்கின்றன? எங்கேயெல்லாம் சீன சந்தையில் அதை பயன்படுத்துகின்றன? எந்த வகை IPR வைத்திருக்கிறது? IPR-ஐ நேரடியாக அப்ளை செய்து பெறுகிறதா? அல்லது ஏஜென்ட் மூலம் பெறுகிறதா? வாங்கிய IPR-ஐ வேறு நிறுவனங்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் விற்றிருக்கிறதா? IPR பாதுகாப்பு அதன் வருமானத்தில் எப்படி உதவுகிறது? என பல ஆய்வுகளை சீனா செய்ய தொடங்கியுள்ளது.
இறுக்கி பிடிக்கும் சீனா
ஒரு நாட்டில் நீங்கள் தொழிலை தொடங்குகிறீர்கள். அங்குள்ள சட்ட திட்டங்கள் சரியாக இருந்தாலும் சில நெளிவு சுழிவுகள் இருந்தால்தான் கல்லா கட்ட முடியும். நேற்றுவரை சீனாவிலும் இப்படித்தான் இருந்தது. ஆனால் டிரம்ப்பின் வரி காரணமாக அமெரிக்க நிறுவனங்களை இறுக்கி பிடிக்க சீனா தொடங்கியுள்ளது. இப்படி செய்தால் சீன நிறுவனங்கள் தாங்களாகவே சீனாவிலிருந்து வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்பின் வரிக்கு சீனா இப்படியாகத்தான் பதிலடி கொடுத்து வருகிறது. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
-
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை












Click it and Unblock the Notifications