நிலாவில் வெற்றிகரமாய் தரையிறங்கியது சீன விண்கலம் சேஞ்ச்-3!
பீஜிங்: சந்திரனில் தரை இறங்கிய சீனா ஆய்வுக்கலன் படம் பிடித்து அதனை பூமிக்கு அனுப்பியது. இதை பார்த்து அதிபர் ஜீ ஜின்பிங் கைத்தட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்.
கடந்த 2ம் தேதி, சீனா 'சேஞ்ச்-3' என்ற விண்கலத்தை சந்திரனைக் குறித்து ஆராய்வதற்காக ஸிவாங் தளத்தில் இருந்து அனுப்பியது. இந்த விண்கலத்தை 'லாங் இந்த மார்ச் 3பி' என்ற ராக்கெட் சுமந்து சென்றது.
'சேஞ்ச்-3' விண்கலம் திட்டமிட்டபடி 12 நாள் பயணத்துக்கு சந்திரனில் தரை இறங்கியது. தற்போது அங்கிருந்தபடி புகைப்படங்களை அனுப்பி வருகிறது அந்த விண்கலம். இதனால் தங்களது திட்டம் வெற்றி பெற்று விட்டதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

3வது நாடு...
சேஞ்ச்-3 விண்கலத்தை அனுப்பியதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக ஆளில்லா விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பிய மூன்றாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜேட் ராபிட்....
நான்கு கால்களுடன் முயல் போல் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த விண்கலத்திற்கு "ஜேட் ராபிட்" என பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கலம் சந்திரனில் ஓரண்டு தங்கியிருந்து அங்கிருந்தபடியே பூமியின் மேற்பரப்பில் உள்ள இயற்கை வளங்களை ஆய்வு செய்து சீனாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்துக்கு தகவல்களை அனுப்பி வைக்கும்.

சீனக் கொடியுடன்....
தற்போது சந்திரனில் தரை இறங்கியுள்ள இந்த ஆய்வுக்கலன் இரவு 11.42 மணி அளவில் சுமார் 9 மீட்டர் தூரம் ஊர்ந்து சென்றது. இது அதன் கேமராவில் படமாக பதிவானது.பின்னர் இந்த காட்சிகள் கொண்ட படங்களை பூமிக்கு அனுப்பி வைத்தது. அதில் சீனாவின் தேசிய கொடி பறக்கும் காட்சியும் தெரிந்தது.

முதல்படம்....
ஆய்வுக்கலன் அனுப்பிய படம் சீனாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருக்கும் பெரிய கண்காணிப்பு திரையில் விழுந்தது.

ஆரவார வரவேற்பு....
அதனை நேரடியாகப் பார்த்த அதிபர் ஜீ ஜின்பிங், பிரதமர் லீ கெகுயாங் ஆகியோர் கைகளை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

வெற்றி..வெற்றி...
இந்த சந்திரனின் ஆய்வு திட்டப்பணி முழுமையாக வெற்றி பெற்று விட்டது என திட்டத்தலைவர் மா ஜிங்ரூயி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர். மேலும், சந்திரனுக்கு அடுத்த கட்டமாக 2017-ம் ஆண்டில் விண்கலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications