ரகசியமாக அருணாசல பிரதேச எல்லையில் அணு ஆயுதங்களை குவிக்கும் சீனா.. ஹை அலர்ட்டில் இந்தியா!
பீஜிங்: ஆசியாவில் ஒரு பெரிய அண்ணன் போல செயல்பட வேண்டும் என்று செயல்பட்டு வரும் சீனா அவ்வப்போது இந்தியாவிடம் வாலாட்டி வருகிறது. இந்த நிலையில் இந்திய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மகாணத்தில் உள்ள மலைப்பகுதிகளில் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் சீனா அணு ஆயுத கட்டமைப்பை விரிவுபடுத்தி வருவதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று சீனா. ஆசியாவில் பெரும் வல்லாதிக்க நாடாக வேண்டும் என்ற கனவுடனும், சர்வதேச அளவில் அமெரிக்காவை விஞ்ச வேண்டும் என்றும், கனவு கண்டு வரும் சீனாவுக்கு பெரும் தலைவலியாக இருப்பது இந்தியாதான்.

உரிமை கொண்டாடும் சீனா
ஆசியாவில் ஒரு பெரிய அண்ணன் போல செயல்பட வேண்டும் என்ற தனது திட்டத்திற்கு இந்தியா தடையாக இருப்பதால் இந்தியா மீது எப்போதுமே எரிச்சலை காட்டி வருகிறது சீனா. ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்திற்கு தடை போடும் ஒரே நாடாக இந்தியா இருப்பதால், இந்தியாவுக்கு எதிராக அவ்வப்போது தனது நரித்தனத்தை சீனா செய்து விடுகிறது.
இருந்தாலும் இந்தியா, இதனை சாதுர்யமாக கையாண்டு தக்க பதிலடியை கொடுத்து வருகிறது. இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளை கைக்குள் போட்டுக்கொண்டு இந்தியாவுக்கு செக் வைக்கும் திட்டத்துடன் இருக்கும் சீனா, இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளையும் தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி அடாவடி செய்கிறது.
உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் சீனா
குறிப்பாக இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலமான அருணாசல பிரதேசத்தை தெற்கு தீபெத் என்று சொல்லிக்கொண்டு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. சீனாவின் இந்த அடாவடி செயலுக்கு இந்தியாவும் தேவையான நேரத்தில் தக்க பதிலடியை கொடுத்து வருகிறது.
ஆனாலும் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் சீனா, குடியிருப்புகளையும் அமைத்து இந்தியாவின் எல்லையோர பாதுகாப்புக்கு சவால் விடுத்து வருகிறது. இதனை இந்தியாவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
அணு ஆயுத கட்டமைப்பை விரிவுபடுத்துகிறதா
இந்த சூழலில் மற்றொரு திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள மலைப்பகுதிகளில் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் அணு ஆயுத கட்டமைப்பை விரிவுபடுத்தி வருவதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
செயற்கைகோள் படங்களை ஆய்வு செய்ததில் இந்த விவரங்களை நிபுணர்கள் கண்டறிந்து இருப்பதாக பிரபல அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அருணாசல பிரதேசத்தில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மலைப்பகுதியில் அணு தொடர்புடைய வளாகங்கள் ரகசியமாக வேகமாக விரிவுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக
இந்த வளாகங்கள் அணு ஆயுத உற்பத்தி மற்றும் அணு ஆயுத சோதனைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தனது அணு ஆயுத தளவாடங்களை சீனா அதிகரித்துவதாக தகவல் வெளியாகக்கூடிய நிலையில், மேற்கொண்ட செய்தி வெளியாகியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சீனாவிடம் 2024 ஆம் அண்டு நிலவரப்படி 600 க்கும் மேற்பட்ட அணு ஆயுத தளவாடங்கள் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2030க்குள் இவற்றின் எண்ணிக்கை ஆயிரமாக உயரும் என்றும் அமெரிக்கா பாதுகாப்புத்துறை கணக்கிட்டுள்ளது. இதன் முலம் ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகில் அதிக அணு ஆயுதங்களை கொண்ட நாடாக சீனா மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காகவே தளவாடங்களை உருவாக்குவதாக சீனா கூறினாலும், அது வைத்து இருக்கும் அளவு மற்றும் காக்கும் ரகசியம், இடம் ஆகியவை இந்தியாவுக்கு கவலைகளை அதிகரிப்பதாக உள்ளது. குறிப்பாக அசல் எல்லை கட்டுப்பாட்டு பகுதி அருகே சீனா ராணுவத்தின் நடமாட்டம் அதிகரித்துள்ளை இந்த சூழலில் சீனாவின் இந்த ரகசிய அணு ஆயுத தயாரிப்பு குறித்த தகவலையும் இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
சீனா சத்தமின்றி வேகமாக, எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அணு ஆயுதங்களை கட்டமைத்து வருகிறது. அணு ஆயுத விரிவு, எல்லைப் பகுதிகளில் ராணுவப்படுத்துதல், அரசியல் வெளிப்படைத்தன்மை இல்லாமை போன்றவற்றை அந்த நாடு கடைப்பிடித்து வரும் நிலையில், இந்தியா மிக மோசமான சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டிய நிலையை உருவாக்கியிருப்பதாக பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கையை கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications