விண்வெளியையும் விழுங்கும் டிராகன்! 30வது முறையாக சீனா செய்யும் காரியும்.. இந்தியாவுக்கு நெருக்கடி
பெங்ஜிங்: 30வது முறையாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புகிறது சீனா. விண்வெளியில் தனக்கென பிரத்யேகமாக விண்வெளி யைமத்தை அமைத்து வரும் நிலையில் அதை மேம்படுத்த இன்று விண்வெளிக்கு மனிதர்களை சீனா அனுப்புகிறது.
விண்வெளி துறையில் ரஷ்யா, அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது சீனாதான். இது ஏராளமான ஸ்பேஸ் மிஷன்களில் வெற்றிகரமாக சாதித்து காட்டியிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தனக்கென ஒரு தனி விண்வெளி ஆய்வு மையத்தையே உருவாக்கி வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா உருவாக்கி வைத்திருக்கும் விண்வெளி மையம் வரும் 2025ம் ஆண்டில் கலைக்கப்படுகிறது. எனவே இதற்குள் தங்களுக்கு என தனி மையத்தை உருவாக்க ரஷ்யாவும், சீனாவும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன.

இப்படி இருக்கையில் தன்னுடைய ஸ்பேஸ் ஸ்டேஷனை மேம்படுத்த மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு இன்று அனுப்புகிறது சீனா. இன்று காலை 11.14 மணியளிவில் மூவரையும் ஏற்றிக்கொண்டு விண்ணில் பாய்கிறது ஷென்சோ-17 விண்கலம். 'ஷென்சோ' என்பது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு சீனா வைத்த பெயர். இந்த திட்டத்தின் கீழ் சீனாவிலிருந்து 12வது முறையாக மனிதர்கள் விண்வெளிக்கு செல்கின்றனர். இதுவரை 29 முறை சீனர்கள் விண்வெளிக்கு சென்றிருக்கின்றனர். இந்த பயணமும் வெற்றியடைந்தால் கணக்கு 30 ஆகிவிடும்.
விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் சுமார் 6 மாத காலம் வரை அங்கேயே இருந்து, தங்களின் விண்வெளி மையமான தியாங்காங்-ஐ மேம்படுத்துவார்கள். மேலும் சில ஆய்வுகளையும் மேற்கொள்வார்கள். இறுதியாக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் மங்கோலியாவுக்கு அருகே இவர்கள் தரையிறங்குவார்கள். இந்த மிஷன் இந்தியாவுக்கான சவாலை மேலும் அதிகரித்திருக்கிறது. சீனாவும் இந்தியாவும் ஏறத்தாழ ஒரே காலத்தில்தான் விடுதலை பெற்றது. ஆனால் இரு நாடுகளும் கடந்து வந்த பாதையில் ஏராளமான மாற்றங்கள் நடந்திருக்கிறது. பொருளாதாரமாக இருந்தாலும் சரி, மனிதவள குறியீடாக இருந்தாலும் சரி எல்லவற்றிலும் முந்தியிருப்பது சீனாதான்.
குறிப்பாக விண்வெளித்துறையில் ஏராளமான சாதனைகளை செய்திருக்கிறது. மேலே குறிப்பிட்டதை போல சொந்தமாக 29 முறை தனது நாட்டை சேர்ந்த வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி வைத்திருக்கிறது. ஆனால் இந்தியா, மனிதர்களை சொந்தமாக விண்வெளிக்கு அனுப்ப 2025ம் ஆண்டு வரை ஆகும். அதேபோல நாம் சொந்தமாக விண்வெளி மையத்தை உருவாக்க நீண்ட காலம் ஆகும். அதற்குள் விண்வெளியையும் சீனா ஆக்கிரமித்து விடுமோ என்கிற அச்சம் மேலெழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications