ரஷ்யா சென்ற ராஜ்நாத் சிங்.. அவசர பேச்சுவார்த்தைக்கு அழைத்த சீனா.. மாஸ்கோவில் அடுத்தடுத்த திருப்பம்!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவில் இருக்கும் இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் பேச்சுவார்த்தை நடத்த சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பென்காய் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

Recommended Video

    ரஷ்யாவில் இருக்கும் ராஜ்நாத் சிங்-ஐ பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் சீனா

    ரஷ்யாவில் தற்போது எஸ்டிஓ மாநாடு எனப்படும் 8 நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு நடந்து வருகிறது. பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் இதில் நடந்து வருகிறது.

    எஸ்சிஓ என்பது ஷான்காய் கோஆப்ரேஷன் ஆர்கனைசேஷன் (Shanghai Cooperation Organization -SCO) ஆகும். சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிரிக்யஸ்தான், தஜிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த குழுவில் உள்ளது.

    மீட்டிங் நடக்கிறது

    மீட்டிங் நடக்கிறது

    இந்த நாடுகளின் பாதுகாப்பு துறை அமைச்சர்களுக்கு இடையே ரஷ்யாவில் கூட்டம் நடந்து வருகிறது. இதற்காக இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா சென்று இருக்கிறார். இதையடுத்து ரஷ்யாவில் இந்தியா - ரஷ்யா இடையே ஏகே 47 உற்பத்தி தொடங்கி பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதோடு இந்தியா ரஷ்யாவிடம் ஆர்டர் செய்து இருக்கும் விமானங்கள் மற்றும் ஆயுதங்களை துரிதமாக வழங்கவும் ராஜ்நாத் சிங் இதில் கோரிக்கை வைத்தார்.

    சீனா கோரிக்கை

    சீனா கோரிக்கை

    இந்த மீட்டிங்கில் சீனா மற்றும் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர்களை ராஜ்நாத் சிங் சந்திப்பாரா என்று கேள்வி எழுந்தது. ஆனால் ராஜ்நாத் சிங் இது தொடர்பாக எந்த விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த நிலையில் ராஜ்நாத் சிங் உடன் பேச்சுவார்த்தை நடத்த சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பென்காய் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. ரஷ்யா மூலம் இதற்கு சீனா தூது விட்டதாக கூறப்படுகிறது.

    சேரவில்லை

    சேரவில்லை

    எல்லை பிரச்சனை குறித்து பேச வேண்டும், என்று சீனா அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் இதை ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டார் என்கிறார்கள். அவர் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்கிறார்கள். சீனா தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகும் கூட எல்லையில் அத்துமீறி வருகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ராஜ்நாத் சிங் கூறியதாக தெரிகிறது.

    ஏன் முக்கியம்

    ஏன் முக்கியம்

    மாஸ்கோவில் நடக்கும் இந்த எஸ்சிஓ மீட்டிங் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. லடாக் பிரச்சனை நிலவும் போதும் இந்தியா - சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் ரஷ்யாவில் இருக்கிறார்கள். கடந்த முறை சீனா- இந்தியா மோதலில் ரஷ்யா மத்தியசம் பேசியது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த முறை மாஸ்கோவில் நடக்கும் மீட்டிங் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+