சீனாவில் புயலை கிளப்பிய 19 வயது ராணுவ வீரரின் கல்லறைப்படம்.. அனல் பறக்கும் விவாதம்.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த இளம் வயது ராணுவ வீரரின் கல்லறைப் புகைப்படம் அந்நாட்டில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஜூன் 14 இரவு மற்றும் 15 தேதி அதிகாலையில் இந்தியாவுடன் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த சீன வீரர்களில் இவரும் ஒருவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது,.

Recommended Video

    கல்வாண் மோதலில் உயிரிழந்த சீன வீரர்கள்.. வெளியான ஆதாரம்

    19 வயதாகும் சீன ராணுவ வீரரின் கல்லறையின் புகைப்படம், அந்நாட்டில் உள்ள சமூக ஊடகங்களில் பரவி வருவதை பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

    கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் சீனத் தரப்பில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே இந்தியாவிடம் உள்ளன. இப்போதைய புகைப்படம் கூடுதல் ஆதாரமாக பார்க்கப்படுகிறது.

    சீன ராணுவம்

    சீன ராணுவம்

    எனினும் இந்திய இராணுவம் ஒருபோதும் எதிரி நாட்டு உயிரிழப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. சீனாவின் மக்கள் விடுதலை ராணுவ படையில் உள்ள அதிருப்தியின் காரணமாகவே இதுபோன்ற கசிவுகள் அங்கு நடக்கின்றன. உயிரிழப்புகள் ஏற்பட்டது என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும் "என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.

    சீன ராணுவ வீரர் பலி

    சீன ராணுவ வீரர் பலி

    சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்த கல்லறை புகைப்படம் சீனாவின் மாண்டரின் மொழியில் உள்ளது. அதில் "சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 13 வது படைப்பிரிவின் தெற்கு சின்ஜியாங் இராணுவ மாவட்டத்தின் 69316 பிரிவின் சிப்பாய் தியாகி சென் சியாங்கிரோங்கின் கல்லறை". சீனாவின் புஜியான் மாகாணமான பிங்னன் கவுண்டியில் டிசம்பர் 2001 இல் பிறந்தார். ஜூன் 2020 இல் இந்தியாவின் எல்லை பாதுகாப்புக்கு எதிரான போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தார்" என்று உள்ளது.

    கால்வான் பள்ளத்தாக்கு

    கால்வான் பள்ளத்தாக்கு

    கல்லறையில் குறிப்பிடப்பட்டுள்ள தெற்கு சின்ஜியாங் இராணுவ மாவட்டம் இந்தியாவின் லடாக்கின் எல்லைக்கு அடுத்து உள்ள பகுதியாகும். இதில் அக்சாய் சின் பகுதியும் அடங்குகிறது. இந்தியா சீனா ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியை ஒட்டிய கால்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகளும் கடந்த ஜூன் 14 இரவு மற்றும் 15ம் தேதிகளில் மோதிக்கொண்டன. இந்திய இராணுவம் இரு பக்கமும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கூறியது - மேலும் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்துவிட்டதாக அறிவித்தது.

    பலர் பலியாகி இருக்கலாம்

    பலர் பலியாகி இருக்கலாம்

    ஆனால் சீனா தனது தரப்பில் எந்த மரணத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை. பின்னர், சில இந்திய ஊடகங்களில் சீன தரப்பில் ஏராளமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியிட்டன. இந்நிலையில் தான் இப்போது 19வயது சீன ராணுவ வீரரின் கல்லறை புகைப்படம் வெளியாகி உள்ளது.

    அனல் பறக்கும் விவாதம்

    அனல் பறக்கும் விவாதம்

    இதுவரை, உயிரிழந்த வீரரின் கல்லறை குறித்து சீன அரசாங்கத்திடமிருந்தோ அல்லது சீன மக்கள் விடுதலை ராணுவத்திடம் (பி.எல்.ஏ.) இருந்தோ அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வரவில்லை. புகைப்படங்கள் வெய்போ (சீன மைக்ரோ பிளாக்கிங் தளம்) வில் வெளியாகி அனல் பறக்கும் விவாதத்தை அங்கு கிளப்பி உள்ளது. இந்நிலையில் சீனா ஏன் இறப்புகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை? என்று பலர் ஆச்சர்யம் அடைந்தனர். மேலும் சிலரின் படங்கள் இதேபோன்று வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+