திடீரென பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் சீனா.. ராஜ்நாத்தை சந்திக்க தீவிர முயற்சி.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: இத்தனை நாட்களாக பெரிய அளவில் பேச்சுவார்த்தை மீது ஆர்வம் காட்டாமல் எல்லையில் அத்துமீறி வந்த சீனா தற்போது இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் எப்படியாவது ஆலோசனை நடத்தியே தீர வேண்டும் என்று தீவிர முயற்சி செய்து வருகிறது. இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது.

Recommended Video

    ரஷ்யாவில் இருக்கும் ராஜ்நாத் சிங்-ஐ பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் சீனா

    லடாக் பிரச்சனையில் எப்போதும் பேச்சுவார்த்தையை மீறி செயல்படுவதே சீனாவின் வேலையாகி விட்டது. மே மாதத்தில் நடந்த பேச்சுவார்த்தை தொடங்கி கடைசியாக ஜூலை 6ம் தேதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடந்த மீட்டிங் வரை எந்த பேச்சுவார்த்தையும் சீனா மதித்ததே இல்லை.

    பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் முடிவுகளை சில நாட்களில் காற்றில் பறக்க விடுவதே சீனாவின் வேலை. அதிலும், இந்த பேச்சுவார்த்தைக்கான முன்னெடுப்பை எப்போதும் இந்தியாதான் முதலில் எடுத்துள்ளது.

    என்ன அழைப்பு

    என்ன அழைப்பு

    இந்த நிலையில் ரஷ்யா சென்று இருக்கும் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா முயன்று வருகிறது. ஆம், சீனா தாமாக முன்வந்து பேச்சுவார்த்தை நடந்த முயன்று வருகிறது. ரஷ்யாவில் தற்போது எஸ்டிஓ மாநாடு எனப்படும் 8 நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு நடந்து வருகிறது. பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் இதில் நடந்து வருகிறது.லடாக் பிரச்சனை நிலவும் போதும் இந்தியா - சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் ரஷ்யாவில் இருக்கிறார்கள். இவர்கள் இதில் சந்திக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    இந்தியா ஸ்டைலை மாற்றியது

    இந்தியா ஸ்டைலை மாற்றியது

    இதற்கு முதல் காரணம் சீனாவின் அச்சம் என்கிறார்கள். இவ்வளவு நாள் எல்லையில் அமைதி காத்து வந்த இந்தியா தற்போது தனது ஸ்டைலை மாற்றியுள்ளது. லடாக்கில் இந்தியா இத்தனை நாட்கள் ரோந்து பணிகளை மட்டுமே செய்து வந்தது. ஆனால் தற்போது எல்லையில் பிரச்சனைக்குரிய இடங்களை இந்தியா ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது. இது சீனாவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்தியாவின் திடீர் ஸ்டைலை சீனா எதிர்பார்க்கவில்லை.

    சீனாவால் முடியாது

    சீனாவால் முடியாது

    அதேபோல் லடாக் பிராந்தியத்தில் பெரும்பாலான மலைகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் பெரிய அளவில் அங்கு சீனாவால் வாலாட்ட முடியாது. இந்திய வீரர்கள் போல திறமையான மவுன்டெயின் படைகளும் சீனாவிடம் இல்லை. இதனால் இப்போது லடாக்கில் தேவையில்லாமல் வீண் வம்பை விலைக்கு வாங்கியது போல ஆகிவிடும். அதனால் சீனா இப்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியாக போக நினைக்கிறது.

    பனி காலம்

    பனி காலம்

    அதோடு பனிக்காலம் வரப்போகிறது. இப்போதே லடாக்கில் வெப்பநிலை நாளுக்கு நாள் குறைய தொடங்கி உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் லடாக்கில் அத்துமீறுவதை விட மோசமான திட்டம் வேறு இருக்காது. அதிலும் இந்த வெப்பநிலை இந்தியர்களுக்கு ஒத்துழைக்கும் அளவிற்கு சீன வீரர்களுக்கு ஒத்துழைக்காது. இதனால் சீனா இப்போது ஆக்கிரமிப்பை செய்ய யோசிக்கும் என்று கூறுகிறார்கள்.

    இன்னொரு பக்கம் அமெரிக்கா

    இன்னொரு பக்கம் அமெரிக்கா

    இன்னொரு பக்கம் அமெரிக்கா தொடங்கி உலக நாடுகளை சீனா பகைத்துக் கொண்டு இருக்கிறது.லடாக் மோதல் போலவே தென் சீன கடல் எல்லையிலும் சீனா மோதலை கடைப்பிடித்து வருகிறது. தென் சீன கடல் எல்லையில் தற்போது அமெரிக்காவுடன் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் லடாக்கில் சீனா மோதலை மேற்கொள்ள முடியாது. இரண்டு பக்கமும் தாக்குதலை சமாளிக்க முடியாது .

    பகைப்பது தவறு

    பகைப்பது தவறு

    இப்போது சீனாவிற்கு என்று நெருங்கிய நட்பு நாடு எதுவும் இல்லை. ஒரே நட்பு நாடான வட கொரியாவில் கூட என்ன நடக்கிறது என்று உலக நாடுகளுக்கு சரியாக தெரியவில்லை. இதனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவை சீனா பகைத்துக்கொள்ள முடியாது. இதனால் இந்தியாவுடன் முடிந்த அளவு அளவு அமைதியை கடைபிடிக்க சீனா முயன்று வருகிறது.

    ரஷ்யா சொன்னால் கேட்கும்

    ரஷ்யா சொன்னால் கேட்கும்

    இன்னொரு பக்கம் ரஷ்யா மூலம் எப்படியாவது பிரச்சனையை தீர்க்கலாம் என்று சீனா நினைக்கிறது. அமெரிக்காவை வைத்து மத்தியசம் பேச முடியாது . அதனால் ரஷ்யாவை வைத்து எப்படியாவது பேச்சுவார்த்தை நடத்தலாம். ரஷ்யா மூலம் எப்படியாவது இந்த பிரச்சனையை சமாளிக்கலாம் என்று சீனா நினைக்கிறது.ரஷ்யா என்பது இந்தியா மற்றும் சீனா இரண்டிற்கும் நட்பு நாடுகள் ஆகும்.

    எல்லாம் தந்திரம்

    எல்லாம் தந்திரம்

    இதனால் ரஷ்யா சொன்னால் கண்டிப்பாக இந்தியா கேட்கும் என்று சீனா நினைக்கிறது. அதனால் இன்று நடக்கும் மீட்டிங்கில் முக்கியமான எல்லை பிரச்சனை குறித்த விஷயங்களை ஆலோசனை செய்ய சீனா நினைக்கிறது. ரஷ்யா மூலம் எல்லை பிரச்சனையில் தங்களுக்கு சாதகமாக முடிவுகளை எடுக்கலாம் என்று சீனா நினைக்கிறது. இதனால்தான் இன்று எப்படியாவது மீட்டிங் நடக்க வேண்டுமென்பதில் ரஷ்யா உறுதியாக இருக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+