காலாவதியான தயாரிப்புப் பொருட்கள் – சிக்கலில் சீன மெக் டொனால்ட்ஸ், கேஎப்சி நிறுவனங்கள்
ஷாங்காய்: சீனாவில் காலாவதியான உணவுப் பொருட்களைப் பயன்படுத்திய மெக் டொனால்ட்ஸ் மற்றும் கேஎப்சி மேல் சீன அரசாங்கம் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சீன அரசு சமீப காலத்தில் உணவுத்துறையில் நடைபெற்று வரும் ஊழல்கள் குறித்து கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அங்குள்ள உணவு நிறுவனங்களின் ஊழல்கள் மக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தி வருகின்றது.

குற்றச்சாட்டில் உணவகங்கள்:
இந்நிலையில் அங்கு அமைந்துள்ள மேற்கத்திய துரித உணவகங்களான மெக்டொனால்ட்ஸ், கேஎப்சி, பீட்ஸா ஹட் போன்ற நிறுவனங்கள் புதிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளன.

காலவதியான உணவுகள்:
இந்த நிறுவனங்களுக்கு மூலப் பொருட்களை சப்ளை செய்யும் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த அரோரா ஓஎஸ்ஐ குழுமத்தைச் சேர்ந்த ஹுசி என்ற நிறுவனம் காலாவதியான மாட்டிறைச்சி மற்றும் கோழி வகைகளை மறுதேதியிட்டு விற்பனை செய்துள்ளதாக சீனத் தொலைக்காட்சி நேற்று செய்தி வெளியிட்டது.

கடுமையான விதிமுறைகள்:
இதற்காக கடுமையான விதிமுறைகள் அனுசரிக்கப்படுகின்றன, சட்ட விரோத நடவடிக்கைகள் சகித்துக்கொள்ளப்படமாட்டாது என்று இந்நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது இணையதளத் தகவலில் தெரிவித்துள்ளன. ஆனாலும், இந்த உணவுப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளன.

சாசேஜ்களும் நிறுத்தம்:
ஹுசி நிறுவனம் தங்களுக்கு விற்பனை செய்துவந்த சாசேஜ் வகைகளை நிறுத்திவிட்டதாக தைவானின் டிங் சின் சர்வதேச குழுமம் தெரிவித்துள்ளது.

கொள்முதல் நிறுத்தம்:
ஹுசி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த கொள்முதல் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அந்த வியாபார மையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள ஷாங்காய் அலுவலகம் காவல்துறையுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

விசாரணைப் பிடி:
மேலும், இப்பொருட்களைப் பயன்படுத்திய மெக் டொனால்ட் மற்றும் கேஎப்சி நிறுவனங்களும் விசாரணைக்கு ஆளாகியுள்ளன.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications