குலை நடுங்க வைக்கும் சம்பவம்.. ஆட்டோமெட்டிக்காக தறிகெட்டு ஓடிய "டெஸ்லா" கார்? வேலையை காட்டிய ஏஐ?

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: டெஸ்லா கார் ஒன்று தறிகெட்டு ஓடிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகிலேயே மின்னணு கார்களில் தற்போது டாப் என்றால் அது டெஸ்லா கார்தான். இந்த மின்னணு கார்கள் பேட்டரியில் இயங்கும் என்பதை தாண்டி வேறு ஒரு முக்கியமான வசதியையும் கொண்டு உள்ளது.

அதுதான் டெஸ்லா ஆட்டோமெட்டிக் வசதி. அதாவது டெஸ்லா தந்து ஏஐ வசதி மூலம் செல்ப் டிரைவ் செய்யும்.

செல்ப் டிரைவ்

செல்ப் டிரைவ்

ஏஐ என்றால் மெய்நிகர் அறிவு என்று கூறலாம். நம்முடைய போன் தொடங்கி பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் இந்த ஏஐ வசதியை கொண்டு இருக்கின்றன. ஓகே கூகுள், அலெக்ஸ்சா எல்லாம் இந்த ஏஐ மூலம்தான் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. மார்ஸில் இருக்கும் ரோவர்கள் கூட இந்த ஏஐ வசதி மூலம்தான் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. இப்படி ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டதுதான் டெஸ்லா காரின் செல்ப் டிரைவ் வசதியும்.

எப்படி இயங்கும்

எப்படி இயங்கும்

டெஸ்லா காரின் செல்ப் டிரைவ் வசதி மூலம் டிரைவர் காரை ஓட்டாமலே கார் தானாக செல்லும். இதில் லொகேஷனை கொடுத்துவிட்டால் போதும். கார் தானாக சாலையில் செல்லும். காரை நாம் இயக்க வேண்டிய அவசியம் இல்லை. நேரத்திற்கு ஏற்றபடி, டிராபிக் எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்றபடி இது காரை ஓட்டும். அதோடு இதில் எல்லா பக்கமும் இருக்கும் சென்சார்கள் மூலம் முன்னாடி, பின்னாடி, சைடில் வரும் கார்களை கணிக்க முடியும். இடையில் சட்டென வரும் மனிதர்களையும் கணிக்க முடியும்.

என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?

அந்த அளவிற்கு துல்லியமாக இந்த டெஸ்லா கார்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில்தான் சீனாவின் குவான்டாங் மாகாணத்தில் டெஸ்லா கார் ஒன்று தறிகெட்டு ஓடி உள்ளது. சாலை ஓரம் நிற்க சென்ற டெஸ்லா கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக ஓடி உள்ளது. உச்சபட்ச வேகத்தில் சென்ற அந்த கார் வழியில் இருந்த பலர்மீது மோதி உள்ளது. இதில் 2 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

எப்படி?

எப்படி?

அந்த காரை ஓட்டிய சான் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தில், காரை நான் நிறுத்த முயன்றேன். ஆனால் கார் திடீரென வேகமாக செல்ல தொடங்கியது. பிரேக் அடித்து பார்த்தேன். ஆனால் பிரேக் நிற்கவில்லை. கார் ஆட்டோமெட்டிக்காக தறிகெட்டு ஓட தொடங்கியது. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றுள்ளார். அவர் மது குடித்துவிட்டு வண்டி ஓட்டவில்லை என்பதை போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

மறுப்பு

மறுப்பு

இதனால் டெஸ்லா ஏஐதான் இந்த வேலையை காட்டியதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் டெஸ்லா நிறுவனம் இதை மறுத்துள்ளது. அந்த கார் சுயமாக ஓடவில்லை. காரில் பிரேக் போடப்படவில்லை. பிரேக் போட்டால் சிவப்பு லைட் எரியும். ஆனால் அதில் எரியவில்லை. இதன் அர்த்தம் பிரேக் போடாமல் அவர்கள் ஓட்டி இருக்கிறார்கள் என்பதே. இது செல்ப் டிரைவ் காரணமாக நடக்கவில்லை என்று டெஸ்லா தரப்பு மறுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+