அய்யோ பாவம்.. அதிகரிக்கும் கொரோனா.. சரித்திரத்தில் முதல் முறையாக தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் சீனா
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவல் அதி உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அந்நாட்டின் சரித்திரத்தில் முதல் முறையாக கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்கிறதாம்.
ஒட்டுமொத்த உலக நாடுகளை கடந்த 3 ஆண்டுகளாக பேரழிவுக்கு தள்ளிவிட்டது கொரோனா வைரஸ். 2019-ம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவியது இந்த கொரோனா வைரஸ். பல லட்சம் மக்களை காவு கொண்ட இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைவாக இருந்தது.

தற்போது சீனாவில் மீண்டும் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கிவிட்டது. அதுவும் ஒரே நேரத்தில் பலருக்கும் பரவக் கூடிய உருமாறிய கொரோனா வைரஸ்தான் தற்போதைய பரவலுக்கு காரணம் என கண்டறியபப்ட்டுள்ளது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது.
சீனாவில் கொரோனா மரணங்களும் அதிகரித்துள்ளன. சீனாவின் மயானங்களில் சடலங்கள் கொத்து கொத்தாக தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சீனாவில் கொரோனா தடுப்பூசி போட விரும்புவோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாம். ஆனால் சீனாவின் கையிருப்பில் போதுமான தடுப்பூசி இல்லையாம். இதனையடுத்து அதனது சரித்திரத்தில் முதல் முறையாக கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய இருக்கிறதாம் சீனா. ஜெர்மனியில் இருந்து முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்யப் போகிறதாம் சீனா. சீனாவில் 20,000 ஜெர்மனியர்கள் வசிக்கின்றனர்.

சீனாவின் நிலைமை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கவலை தெரிவித்துள்ளார். மேலும் உலகின் பல நாடுகளில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. ஆனால் சில நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. சீனாவின் நிலைமை கவலை தருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு பற்றிய விவரங்களையும் ஆய்வு தகவல்களை வழங்க வேண்டும் என கேட்டிருக்கிறோம் என்றார்.
சீனா சமூக வலைதளங்களில் கொரோனா கால துயரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தகவல்கள் டிரெண்டிங்காகவும் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. தற்போதைய நிலையில் சீனாவில் பிஎப் 7 என்ற உருமாறிய ஓமிக்ரான் வைரஸ்தான் அதிகமாக பரவி வருகிறது. இதுதான் ஒருநாள் பாதிப்புகளையும் மரணங்களையும் அதிகரிக்க செய்கிறது. சீனாவில் அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் தொடர்ந்து வருவதால் இந்த எண்ணிக்கைகள் பல மடங்கு அதிகரிக்கலாம் என்கிற அச்சம் நிலவுகிறது. இதனையே மருத்துவ வல்லுநர்களும் வெளிப்படுத்தி வருகின்றனர். அதுவும் அடுத்த 3 மாதங்களில் கொரோனா 3 கட்டங்களாக அதாவது 3 அலைகளாகத் தாக்கும்; பல லட்சம் பேர் மரணம் அடைவார்கள் என்கின்றனர் வல்லுநர்கள். ஒட்டுமொத்த சீனாவில் 60% பேர், உலக நாடுகளின் மக்கள் தொகையில் 10% பேர் அடுத்த 3 மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவர் என்பதும் வல்லுநர்கள் எச்சரிக்கை.
இதனைத் தொடர்ந்தே இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டும் வருகின்றன. இந்தியாவில் பிரதமர் மோடியும் இன்று இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்திய மருத்துவ வல்லுர்கள் முக கவசம் அணிதல், பொது இடங்களில் ஒன்று கூடுதலைத் தவிர்த்தல் உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications