சீனாவில் கிணற்றில் தவறி விழுந்த பெண் 15 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு
பெய்ஜிங்: சீனாவில் கிணற்றில் தவறி விழுந்த பெண் ஒருவர் வெளியே வர முடியாமல் அங்கேயே 15 நாட்கள் சிக்கித் தவித்துள்ளார்.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜோங்ஃபெங் கிராமத்தைச் சேர்ந்தவர் சு சிசியூ(38). அவர் 12 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் கடந்த 1ம் தேதி தவறி விழுந்துவிட்டார். அந்த கிணற்றைச் சுற்றி உயரமான சோளக் கருதுகள் இருப்பதால் அவர் விழுந்து தவித்தது யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில் சூவை காணாமல் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து ஒரு வழியாக அவர் கிணற்றுக்குள் விழுந்தது 15 நாட்கள் கழித்து கடந்த திங்கட்கிழமை கண்டுபிடித்தனர். உடனே இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் வந்து சூவை மீட்டனர்.
அவர் கிணற்றுக்குள் விழுந்த சோளத்தை சாப்பிட்டு, மழை நீரை குடித்து உயிர் வாழ்ந்துள்ளார். அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் அவரால் வாயைத் திறந்து பேசவோ, சாப்பிடவோ முடியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் தென்மேற்கு சீனாவில் உள்ள ஒரு கிணற்றில் விவசாயி ஒருவர் தவறி விழுந்தார். அவரை காப்பாற்ற 4 பேர் கிணற்றில் குதித்தனர். ஆனால் அவர்கள் 5 பேரும் வெளியே வர முடியாமல் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications