ஷாக்.. சீனாவில் பயங்கர நிலநடுக்கம்.. கட்டடங்கள் இடிந்தால் அலறிய மக்கள்.. ரிக்டரில் 5.5 என பதிவு
பெய்ஜிங்: சீனாவில் இன்று அதிகாலையில் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். இந்த நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் இடிந்த நிலையில் 10 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
சமீபகாலமாக உலகில் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபால் இரவில் டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நமது அண்டை நாடான சீனாவில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ள நிலையில் கட்டடங்கள் இடிந்து மக்கள் காயமடைந்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது சீனாவின் தெற்கு பகுதியில் ஷான்டாக் மாகாணம் டெசா நகர் அருகே இன்று அதிகாலையில் மக்கள் தங்களின் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 2.33 மணியளவில் சீனாவின் டெசா நகர் அருகே திடீரென கட்டடங்கள் குலுங்கி உள்ளன. இதனால் தூக்கத்தில் இருந்த மக்கள் கண்விழித்து தங்களின் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் சில இடங்களில் வீடுகள் இடிந்து சேதமாகி உள்ளன. வீடுகள் உள்பட மொத்தம் 74 கட்டடங்கள் இடிந்து சேதமான நிலையில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. அதிர்ஷ்டவசமாக பலி எதுவும் ஏற்படவில்லை.
மேலும் சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அந்நாட்டின் நிலநடுக்க அதிர்வை பதிவு செய்யும் மையம் உறுதி செய்துள்ளது. அதாவது சீனாவின் தலைநகர் பெய்ஜிங் பகுதியில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தெற்கு பகுதியில் டெசோ நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் இருந்து தெற்கே 26 கோலமீட்டர் தெலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலை 2.33 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 என்ற அளவில் பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று இரவில் ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியில் ரிக்டர் அளவில் 5.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் டெல்லி, காஷ்மீரிலும் எதிரொலித்தது. அதாவது டெல்லி-என்சிஆர் மற்றும் அருகிலுள்ள பகுதிகள், ஜம்மு காஷ்மீரின் சில இடங்களிலும், பாகிஸ்தானின் சில இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications