காலை முதல் நைட் வரை.. பெண்கள் கையில் "போர்டு".. தூக்கி வாரிப்போட்ட பல்கலை. விளம்பரம்.. ஷாக்
பல்கலைக்கழகத்தின் விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது
பெய்ஜிங்: கல்வியின் தரம் எந்த அளவுக்கு மலிவாக போய்விட்டது என்பதற்கு உதாரணம்தான் இந்த செய்தி.. "காலை முதல் நைட் வரையில் என்னுடன் நூலகத்தில் இருக்க விரும்புகிறீர்களா?" என்று ஒரு பெண் கேட்பது போல விளம்பரம் வைரலாகி வருகிறது.
சீனாவில் நாஞ்சிங் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.. இது அந்நாட்டில் இயங்கி வரும் முன்னணி பல்கலைக்கழகம் ஆகும்..
இங்கு கடந்த வாரம் நுழைவு தேர்வு நடைபெற்றது.. அப்போது தங்களது பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் நிறைய பேர் வந்து படிக்க வேண்டும் என்பதற்காக, பல்கலைக்கழகமே ஆன்லைனில் ஒரு விளம்பரத்தை வீடியோவாக வெளியிட்டது.

பெண்கள்
அதில், அந்த பல்கலைக்கழகத்தில் வேறு வேறு பிரிவுகளில் படிக்கும் 6 மாணவ, மாணவிகள் இடம்பெற்றிருந்தனர்.. 6 பேரும் கையில் நோட்டீஸ் போர்டை ஏந்திக் கொண்டு நிற்கின்றனர்... அதில் 2 மாணவிகள், கையில் உள்ள விளம்பரம்தான் பலருக்கும் தூக்கி வாரிப்போட்டது..

மாணவிகள்
"காலை முதல் இரவு வரையில் என்னுடன் நூலகத்தில் இருக்க விரும்புகிறீர்களா?" என்று ஒரு பெண் கேட்கிறார்.. "நான் உங்கள் இளமையின் ஒரு பகுதியாக மாற விரும்புகிறீர்களா?" என்று இன்னொரு பெண் கேட்கிறார்.. இந்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளைதான் இவர்கள் உயர்த்தி பிடித்து நிற்கின்றனர்.

சர்ச்சை
ஆனால், இதற்கு நேர்மாறாக 6 பேரில் ஒரு மாணவர், "நீங்கள் ஒரு நேர்மையான, விடாமுயற்சியுள்ள, லட்சியமான நாஞ்சிங் மாணவராக மாற விரும்புகிறீர்களா" என்ற வாசகத்தை கையில் பிடித்து நிற்கிறார்.. ஆனால், அந்த 2 மாணவிகளின் விளம்பர பதாகைகள்தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.. படிக்கிற இடத்தில் இப்படியா பெண்களை பயன்படுத்தி, மாணவர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் விளம்பரம் செய்வது என்று கடுமையான கண்டனங்கள் எழுந்தன..

எதிர்ப்பு
இப்படி அழகான பெண்களை நிற்கவைத்து விளம்பரம் தேடுவதற்கு பதிலாக, திறமையான ஆசிரியர்கள் மற்றும் அந்த ஆசிரியர்களின் தரத்தின் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்றும் கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவிட்டனர்.. நாலாபக்கம் இருந்தும் எதிர்ப்புகள் திரண்டதால், அந்த விளம்பரத்தை பல்கலைக்கழகம் உடனே நீக்கிவிட்டது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications