முதலீட்டாளர்களின் 557 கோடி ரூபாயை ‘ஏப்பம்’ விட்ட சீனப் பெண் தொழிலதிபருக்கு தூக்கு
பீஜிங்: முதலீட்டாளர்களின் பணத்தை ஏமாற்றிய சீனப் பெண் தொழிலதிபரின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு சீனப் பெண் தொழிலதிபரான சூ என்யு என்பவர் முதலீட்டாளர்களின் பணத்தை பெற்று அதனை மற்ற தொழில்களில், அதாவது உணவகங்கள், சுகாதார விடுதிகள், நிலக்கரிச் சுரங்கங்கள், நிலங்கள் போன்றவற்றில் முதலீடு செய்தார். கிட்டத்தட்ட 20 மில்லியன் யுவானிற்கு பரிசுக் குலுக்கல் டிக்கெட்டுகள் வாங்கியுள்ளார் சூ.
அதிகப் பணம் திரும்பக் கிடைக்கும் என்ற ஆசையில் முதலீடு செய்தவர்கள், சொன்ன தேதியில் பணம் திரும்பக் கிடைக்காததால் சூ மீது போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் தன்னை கைது செய்ய வருவதற்கு முன்னதாக, முன்னெச்சரிக்கையாக 2006 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையுள்ள ஆவணங்கள் அனைத்தையும் சூ எரித்துவிட்டார். அதன்பின் கடந்த 2011 ஆம் வருடம் செப்டம்பர், மாதம் 20 ஆம் தேதி இவர் காவல்துறையிடம் சரணடைந்தார்.
போலீசாரின் விசாரணையில், முதலீட்டாளர்களின் 557,67,30,939 கோடி ரூபாயை சூ ஏமாற்றியது உறுதியானது. வழக்கை விசாரித்த எர்டோஸ் நகர மக்கள் நீதிமன்றம் 42 வயதான சூ என்யுவிற்கு இந்த வருடம் ஜனவரி மாதம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சூ மேல்முறையீடு செய்தார். வடக்கு சீனாவில் உள்ள இன்னர் மங்கோலியா சுயசார்பு மக்கள் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த மேல்முறையீடு குறித்த விசாரணையில் தூக்கு உறுதி செய்யப் பட்டது.
அதனைத் தொடர்ந்து சூவின் சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, நேற்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் மோசடி செய்தது மிகவும் அதிகப்படியான தொகையாகும். இந்த தொகை மக்களுக்கும், நாட்டுக்கும் குறிப்பிட்டு சொல்லும்படியான சேதத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற வழக்குகளில் மரண தண்டனை தீர்ப்பு என்பதே இறுதியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இது இந்த வருடத்தில் நடந்துள்ள இரண்டாவது தூக்குதண்டனை வழக்காகும். கடந்த மே மாதம் தென்கிழக்கு சீனாவில் ஒரு பெண் தொழிலதிபர் முதலீட்டாளர்களிடம் 100 மில்லியன் டாலர் ஏமாற்றிய வழக்கில் மரண தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications