பிறக்கப் போகுது "செம்மறி ஆடு" ஆண்டு – அதற்குள் பிள்ளை பெற அலை பாயும் சீனப் பெண்கள்!
பெய்ஜிங்: சீனாவில் அடுத்ததாக பிறக்க உள்ளது செம்மறி ஆடு ஆண்டு என்பதால் பல கர்ப்பிணிகள் அதற்கு முன்னதாகவே குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
சந்திரனை அடிப்படையாக கொண்டு 12 ஆண்டுகளாக சீன காலண்டர் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் விசேஷம் என்னவென்றால் ஒவ்வொரு ஆண்டும் மிருகங்களின் பெயரால் குறிப்பிடப்படுகிறது.
முடியும் குதிரை ஆண்டு:
அந்த வகையில் தற்போது நடைபெறுவது குதிரை ஆண்டு ஆக உள்ளது. அடுத்து பிறக்க போவது செம்மறி ஆடு ஆண்டு.
அதிர்ஷ்டம் அற்ற செம்மறி ஆண்டு:
அந்த ஆண்டு வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி பிறக்கிறது. அந்த ஆண்டில் பிறப்பவர்கள் அதிர்ஷ்டம் அற்றவர்களாக கருதப்படுகின்றனர்.
குழந்தை பெற அச்சம்:
எனவே தற்போது கர்ப்பிணி ஆக உள்ள பெண்கள் அடுத்த ஆண்டு குழந்தை பெற அச்சப்படுகின்றனர்.
பெற்றோர்கள் திட்டம்:
தங்களுக்கு பிறக்கும் குழந்தை அதிர்ஷ்டம் இல்லாமல் போய் விடுவார்களோ என அஞ்சுகின்றனர். எனவே, அடுத்த ஆண்டில் தங்கள் குழந்தைகள் பிறப்பதை தடுக்க பல பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சிசேரியன் மூலம் பிரசவம்:
அதன்படி வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதிக்கு முன்பே சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற முடிவு செய்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு குழந்தை பிறப்பு வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிறப்பு சான்றிதழ் தட்டுப்பாடு:
மேலும் பலர் இப்போதே குழந்தை பிறப்பு சான்றிதழ்களை பெற தீவிர முன் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதனால் சில மாகாணங்களில் பிறப்பு சான்றிதழ்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications