கண்காட்சிக்கு வைக்கப்பட்ட ஆயுதங்களை வைத்து இந்தியாவை தாக்கிய பாகிஸ்தான்! சீனா பரபர
பெய்ஜிங்: இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதலின் போது சீன ஏவுகணைகளை இந்தியா பயன்படுத்தியிருந்தது. இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்திய சீன ஏவுகணை குறித்த கேள்விக்குச் சீன பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் அளித்த பதில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே இம்மாத தொடக்கத்தில் மோதல் ஏற்பட்டது. அப்போது இந்திய எல்லையோர பகுதிகள் மீது பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இருப்பினும், பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது. இந்த தாக்குதலில் துருக்கி நாட்டின் ஏவுகணைகளைப் பாகிஸ்தான் பயன்படுத்தியிருந்தது.

சீனா ஏவுகணை
இந்தியா உடனான மோதலில் துருக்கி மட்டுமின்றி சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களையும் பாகிஸ்தான் கணிசமாகப் பயன்படுத்தியது. இருப்பினும், அந்த ஏவுகணை மற்றும் ட்ரோன்களால் கூட இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு மீறி உள்ளே வரவில்லை. இதற்கிடையே இந்தியா பாகிஸ்தான் மோதலில் சீன ஆயுதங்களின் செயல்திறன் குறித்து கேள்விக்குச் சீன ராணுவம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
இந்தியாவைத் தாக்க முயன்ற போது பாகிஸ்தான் PL-15E என்ற சீன ஆயுதத்தைப் பயன்படுத்தியது. இது ரேடார் உதவியுடன் பாயும் அதிநவீன சீன ஏவுகணையாகும். ஒரு வெடிக்காத PL-15E ஏவுகணையை இந்தியா மீட்டெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சீனியர் கர்னல் ஜாங் சியோகாங் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நிலையில், அப்போது இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
சீன பாதுகாப்புத் துறை
PL-15E ஏவுகணை மீட்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதை இந்தியா ரிவர்ஸ் இன்ஜினியரிங் செய்து தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்குமோ எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குச் சீனப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் சீனியர் கர்னல் ஜாங் சியோகாங் அளித்த பதில் பலரையும் கவனிக்க வைத்துள்ளது. அதாவது கண்காட்சிக்கு வைக்கப்பட்ட உபகரணங்களை வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
கண்காட்சிக்கு வைக்கப்பட்டது
இது தொடர்பாக ஜாங் சியோகாங் கூறுகையில், "நீங்கள் குறிப்பிட்ட அந்த ஏவுகணை ஒரு ஏற்றுமதி உபகரணமாகும். அது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல முறை பாதுகாப்பு கண்காட்சிகள் வைக்கப்பட்டது" என்றார். அவரது பேச்சு இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதற்கிடையே நெட்டிசன்கள் சிலர் சீனா கண்காட்சிக்கு வைத்திருந்த செட் அப் ஆயுதங்களை எடுத்து பாகிஸ்தான் தாக்கியுள்ளதாகவும் சொல்லி வருகிறார்கள்.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதலுக்குப் பிறகு சீன பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் நடைபெறும் முதல் செய்தியாளர் சந்திப்பு இதுவாகும். மேலும், இந்தியா பாகிஸ்தான் மோதல் சமயத்தில் சீன ஆயுதங்கள் குறைவான செயல்திறனையே வெளிப்படுத்தியதாகச் சொல்லப்படுவது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இருப்பினும் அதற்குச் சீன அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
இந்தியா பாகிஸ்தான்
இந்தியா பாகிஸ்தான் இடையேயான இந்த மோதலுக்கு பஹல்காம் தாக்குதலே தொடக்கப் புள்ளியாகும். கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் இறங்கிய தீவிரவாதிகள் அங்கிருந்த அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தினர். அதில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். காஷ்மீரில் சமீப காலங்களில் நடந்த மிகப் பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
அதற்குப் பதிலடியாகவே இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா துல்லியமான தாக்குதலை நடத்தியது. இந்தியா நடத்திய இந்த துல்லிய தாக்குதலில் 100+ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications