கொரோனா இருப்பதாக சந்தேகம்.. ஃபிளாட்டில் வைத்து தன்னை தானே பூட்டிக் கொண்ட சீன இளைஞர்.. நொய்டாவில்!
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் கிரேட்டர் நொய்டாவில் ஒரு குடியிருப்பில் தன்னை தானே பூட்டிக் கொண்டு உள்ளே இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
சீனாவில் கொரோனா வைரஸ் பரவி நாடு முழுவதும் உயிரிழப்பையும் பீதியையும் அதிகரித்து வருகிறது. சீனாவை காட்டிலும் மற்ற நாடுகளில் இந்த வைரஸ் அதிகமாக பரவுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசும் கொரோனா வைரஸை எதிர்கொள்ள போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இந்த நோய் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி விட்டது. இதில் மிகவும் மோசமாக தென்கொரியா, பிரான்ஸ், இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் அடங்கும். உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க அந்தந்த நாடுகள் பயணம் மேற்கொள்வதில் கட்டுப்பாடு விதித்துள்ளன. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளன.
கொரோனா வைரஸ் பிறப்பிடமான சீனாவில் 3000-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் கிரேட்டர் நொய்டாவில் சீன இளைஞர் ஒருவர் தங்கியுள்ளார்.
அவர் ஓப்போ செல்போன் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அவர் தங்கியிருந்த குடியிருப்பில் வைத்து தன்னை தானே பூட்டிக் கொண்டார். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் அவர்கள் அந்த இடத்துக்கு வந்தடையவில்லை.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் கிரேட்டர் நொய்டா போலீஸ் நிலையத்திற்கு வந்து முறையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications