For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா குறைந்தது.. இறைச்சி சந்தையில் வவ்வால், பாம்பு, தேள், பூனை விற்பனை அமோகம்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் விதமாக சீன மார்க்கெட்டுகளில் பாம்பு, நாய், பூனை, தேள், வவ்வால்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை மீண்டும் தொடங்கியது. கொரோனாவால் 3000-க்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொடுத்த இந்த மக்கள் எப்போதுதான் பாடம் கற்றுக் கொள்வார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

    கொரோனா குறைந்தது.. இறைச்சி சந்தையில் வவ்வால், பாம்பு, தேள், பூனை விற்பனை அமோகம்! - வீடியோ

    சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரத்தில் ஒரு கடல் உணவு சந்தைலிருந்து கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. எனினும் இதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.

    எனினும் இங்கிருந்து பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. கடல் உணவு சந்தையில் நாய்கள், பூனைகள், கோலாக்கள், எலிகள், ஓநாய் குட்டிகள், தேள்கள், வவ்வால்கள் ஆகியன விற்கப்படுகின்றன.

     என்னாது கொரோனா வைரஸ் ராத்திரியில தூங்குமா? இதென்னய்யா புதுக்கதையா இருக்கு! என்னாது கொரோனா வைரஸ் ராத்திரியில தூங்குமா? இதென்னய்யா புதுக்கதையா இருக்கு!

    பலி

    பலி

    இந்த நிலையில் சீனாவின் வுகான் உணவு சந்தையில் இறால் விற்கும் பெண் ஒருவரே உலகின் முதல் கொரோனா நோயாளி என தெரியவந்துள்ளது. வீ ஹுய்சியான் (57) என்ற மூதாட்டி முதன்முதலாக கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளார். இவர்தான் வுகான் நகரம் உள்பட உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பலியானதற்கு காரணமாக கூறப்படுகிறது.

    போக்குவரத்து

    போக்குவரத்து

    இந்த ஒரு பெண்ணால் உலகம் முழுவதும் இன்னும் கொரோனாவை எதிர்த்து போராடி வருகின்றன. இந்த தொற்றுநோயால் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்து வருகின்றனர். மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவி வந்த கொரோனா சீனாவில் தற்போது கட்டுக்குள் காணப்படுகிறது. ஹூபே மாகாணமும் இயல்பு நிலைக்கு திரும்பியது. வுகான் மாகாணமும் ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி முதல் போக்குவரத்து இயக்கப்படும்.

    இறைச்சிக் கடை

    இறைச்சிக் கடை

    மற்ற நாடுகள் முடங்கிய நிலையில் தங்கள் நாட்டு பொருளாதாரத்தை உயர்த்த மீண்டும் இறைச்சிக் கடைகளை திறக்க முடிவு செய்தனர். இதற்கு முன்னர் அங்கு இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா குறைந்ததை கொண்டாட மீண்டும் இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

    உணவு பழக்கவழக்கம்

    உணவு பழக்கவழக்கம்

    குயிலினில் ஒரு சந்தையில் புதிய நாய், பூனைகள் சலுகை விலைக்கு வழங்கப்பட்டன. நாய்களும் பூனைகளும் துருப்பிடித்த கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய மருந்தாக வவ்வால்களும் தேள்களும், முயல்களும் கருதப்படுகின்றன. தோல் உரிக்கப்பட்ட வாத்துகளும் முயல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. எந்தவித சுகாதார முறைகளும் கடைப்பிடிக்கப்படாமல் இந்த விலங்குகள் விற்பனைக்கு வந்தன. ஆயிரக்கணக்கான உயிர்கள் போன நிலையில் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளாத சீனா மீண்டும் தனது கன்னாபின்னா உணவு பழக்கத்தை தொடங்கி உலக நாடுகளை அதிரச் செய்துள்ளது.

    English summary
    Chinese markets are still selling bats, snakes, cats to celebrate the victory in defeating Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X