கூடா நட்பு.. தைவான் மீது போர் தொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார்! மிரட்டும் சீனா ராணுவம்
தைபே: தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அந்நாடு உரிமை கோரி வரும் நிலையில், தற்போது தைவானை சுற்றி வளைத்திருக்கிறது. 49 போர் விமானங்கள், 19 போர் கப்பல்கள் தைவானை சுற்றி சீனா நிற்க வைத்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக தைவான் தனிப்பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது. உலக நாடுகள் அமெரிக்கா உட்பட, தைவான் என்பது சீனாவுடன் இணைந்த பகுதி என்று ஏற்றுக்கொண்டிருக்கிறது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக அமெரிக்கா தைவானுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. இதனால் தைவான் சீனாவுக்கு எதிரக திரும்பியிருக்கிறது.

அதாவது சீனாவை கலந்தாலோசிக்காமல் தைவான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, ஒப்பந்தம் மேற்கொள்வது என அமெரிக்கா சில நடவடிக்கையில் இறங்கியது. இது சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருந்த உரசல்களை மேலும் தீவிரமாக்கியது. இந்நிலையில் கடந்த 2022ல் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றிருந்தார். இது சீனாவுக்கு ஆத்திரமூட்டவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானை ஒட்டியுள்ள கடற்பரப்பில் போர் பயிற்சியை மேற்கொண்டது.
அப்போது தொடங்கி தற்போது வரை அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதிகள் தைவானுக்கு செல்வதும், சீனா போர் பயிற்சியை மேற்கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது. “தைவான் பிரதிநிதிகள் மற்ற நாடுகளுக்கு சென்று தங்கள் உரிமை குறித்து பேசுவதை சீனா தடுத்திருக்கலாம். ஆனால், அமெரிக்காவின் பிரதிநிதிகள் தைவானுக்கு செல்வதை தடுப்பதன் மூலம் தைவானை சீனாவால் தனிமைப்படுத்திவிட முடியாது” என்று அமெரிக்கா பகிரங்கமாக கூறியிருக்கிறது.
இந்நிலையில் தைவானை சீனா தற்போது சுற்றி வளைத்திருக்கிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி, SU-30, J-16 மற்றும் KJ-500 உட்பட மொத்தம் 49 சீனாவின் ராணுவ போர் விமானங்கள் தைவானை சுற்றி நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதேபோல 19 போர் கப்பல்களும் தைவனை சுற்றி நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இது தவிர 7 சீன கடலோர காவல்படை கப்பல்களும் தைவானை சுற்றி இருக்கின்றன.
இது குறித்து கூறிய தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறுகையில், “நாங்கள் நிலைமையை உண்ணிப்பாக கவனித்து வருகிறோம். தைவான் பாதுகாப்புக்காக அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்திருக்கிறது.
சீனாவின் இந்த எதிர்ப்பு மற்ற நாடுகள் தைவான் உடன் ராஜதந்திர உறவை மேம்படுத்தும் முன்பு பல முறை சிந்திக்க வைக்கும். ஏனென்றால், அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்காவைப் போலச் சீனாவின் ராணுவ பலத்தை எதிர்கொள்ளும் திறன் இருக்காது. சீனா உடனான வர்த்தகம் மிக முக்கியம் என்பதால் ஐரோப்பா நிச்சயம் இந்த விவகாரத்தில் தலையிடாது.
இரு வல்லரசு நாடுகளுக்கு இடையேயான மோதலின் நடுவே சிக்கிக் கொண்டால் என்ன நடக்கும் எனத் தெரியும் என்பதால் பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய நாடுகளும் இந்த விவகாரத்தில் நிச்சயம் அணிசேரா கொள்கையையே எடுக்கும்.












Click it and Unblock the Notifications