காலியான கொரோனா மருந்துகள்.. "வேற வழியே இல்லை".. இந்திய மருந்துகளை விரும்பி வாங்கும் சீன மக்கள்!
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கான மருந்துகள் காலியாகிவிட்ட நிலையில், இந்திய தயாரிப்பு கொரோனா மருந்துகளை வாங்க அந்நாட்டு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே, இந்திய கொரோனா மருந்துகளுக்கு சீனா அனுமதி கொடுக்காத நிலையில், கள்ளச்சந்தையில் இருந்து அந்த மருந்துகள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்திய மருந்துகள் உடனடியாக காய்ச்சலை குறைப்பதால் நம் நாட்டு மருந்துகளுக்கு அங்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா மருந்து தட்டுப்பாடு
சீனாவில் கொரோனா தொற்று பரவல் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகம் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. நாளொன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்புக்கு உள்ளாவதாகவும், 5 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சீன மருத்துவமனைகள் ஒருபுறம் நோயாகளாலும், மறுபுறம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களாலும் நிரம்பி வருகின்றன. கடந்த 2 வாரங்களாக 24 மணிநேரமும் சீனாவில் உள்ள சுடுகாடுகள் சடலங்களை எரியூட்டி வருவதாக அமெரிக்க ஊடங்கள் படங்களுடன் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், சீனாவில் அதற்கான மருந்துகள் தீர்ந்து போய்விட்டன.

நோயாளிகளுக்கு வெறும் இருமல் மருந்து
கொரோனா மருந்துகள் தீர்ந்துவிட்டதால், தற்போது சீனா முழுவதும் வைரஸ் காய்ச்சல் இருப்பவர்களுக்கு சாதாரண இருமல் மருந்துகள் மட்டுமே மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவும், அந்நாட்டில் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும், அமெரிக்காவிலும் கொரோனோ பரவல் அதிகரித்திருப்பதால், அந்நாடும் மற்ற நாடுகளுக்கு விநியோகித்து வந்த மருந்துகளை கணிசமாக நிறுத்திவிட்டது.

இந்திய மருந்துகளை விரும்பும் சீனர்கள்
சீனாவை பொறுத்தவரை, நடப்பாண்டில் ஃபைசர் நிறுவனத்தின் பாக்லோவிட், அஸ்வுடின் ஆகிய 2 மருந்துகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மற்ற எந்த நாட்டின் மருந்துகளுக்கும் அந்நாடு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில், தற்போது அங்கு இந்த 2 மருந்துகளும் தீர்ந்துவிட்டதால், இந்திய தயாரிப்பு மருந்துகளான பிரிமோவிர், பக்ஸிஸ்டா, மொல்நுவன்ட், மோல்நட்ரிஸ் ஆகியவற்றுக்கு அங்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்த மருந்துகள் உடனடியாக காய்ச்சல், தலைவலியை குறைத்துவிடுவதால் சீன மக்கள் இந்த மருந்துகளை வாங்க போட்டிப்போட்டு வருகிறார்கள்.

கள்ளச்சந்தை விற்பனை.. கடும் எச்சரிக்கை
இதனிடையே, மேற்குறிப்பிட்ட இந்திய தயாரிப்பு மருந்துகளுக்கு சீனாவில் அனுமதி இல்லாததால், அவை கள்ளச்சந்தைகளில் அதிக அளவில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுவதாக 'சவுத் சைனா போஸ்ட்' பத்திரிகை தெரிவித்துள்ளது. கரோனா ஜெனரிக் தடுப்பு மருந்துஒரு பெட்டி 1,000 யுவானுக்கு(ரூ.11,870) விற்பனை செய்யப்படுகின்றன. இந்திய தயாரிப்பு மருந்துகளை எவ்வளவு பணம் கொடுத்து வேண்டுமானாலும் வாங்குவதற்கு, மக்கள் தயாராக உள்ளனர். இதனிடையே, இந்தியாவில் தயாரிக்கப்படும் கரோனா மருந்துகள் சீன அரசால் அங்கீகரிக்கப்படவில்லை என்றும், அவற்றை விற்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் சீனா அறிவித்துள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications