For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேருக்கு நேர்.. கனடா பிரதமர் ஜஸ்ட்டினிடம் கோபத்தை கொப்பளித்த ஜி ஜின்பிங்.. ஜி20 மாநாட்டில் ஷாக்

Google Oneindia Tamil News

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ஜி20 மாநாட்டில் கேமராக்களின் முன்னிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவிடம் கோபத்தை கொப்பளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உலகளவில் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் வளரும், வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பில் ஒன்றாக ஜி20 அமைப்பு உள்ளது.

இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, ஜப்பான், பிரான்ஸ், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜெர்மனி, இந்தோனேசியா உள்பட 20 நாடுகள் உள்ளன.

ஆசை ஆசையாய் கனடா பயணம்.. 2வது நாளிலேயே பணிநீக்கம் செய்த மெட்டா.. அதிர்ச்சியில் ஹைதராபாத் இளைஞர்! ஆசை ஆசையாய் கனடா பயணம்.. 2வது நாளிலேயே பணிநீக்கம் செய்த மெட்டா.. அதிர்ச்சியில் ஹைதராபாத் இளைஞர்!

ஜி20 உச்சி மாநாடு

ஜி20 உச்சி மாநாடு

இந்த அமைப்பின் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் நேற்று முன்தினம் துவங்கி நடைபெற்றது. நேற்று வரை 2 நாட்கள் நடைபெற்றது. இதில் ஜி20 அமைப்பில் உறுப்பினராக உள்ள நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். பிரதமர் நரேந்தி மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்பட ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

 தலைவர்கள் பேச்சுவார்த்தை

தலைவர்கள் பேச்சுவார்த்தை

இந்த மாநாட்டின்போது உக்ரைன் மீதான போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என உலக தலைவர்கள் ஒன்றுபோல் குரல் கொடுத்தனர். மேலும் உலகில் நிலவும் பொருளாதார நெருக்கடி, பணவீக்க நிலையை கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி விவாதித்தனர். இதுதவிர ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் பிற நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாடு தலைவர்கள் தங்கள் நாட்டு உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.

 கோபத்தை காட்டிய சீன அதிபர்

கோபத்தை காட்டிய சீன அதிபர்

இந்த நிலையில் தான் சீனா அதிபர் ஜி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்ட்டீன் ட்ரூட்டோவிடம் கோபத்தை வெளிப்படுத்திய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதுதொடர்பான வீடியோவும் தற்போது இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதாவது ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ ஆகியோர் சந்தித்து கொண்டனர்.

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

இந்த வேளையில், ‛‛இருநாடுகள் இடையே நடக்கும் விவாதங்கள் பற்றிய விபரங்கள் அனைத்தும் செய்தித்தாள்களுக்கு கசிந்துள்ளது. இது சரியானதாக இல்லை. உங்களிடம் நேர்மை இல்லை. '' என ஜி ஜின்பிங் கோபமாக கூறினார். இதை கேட்ட ஜஸ்ட்டின் ட்ரூடோ, ‛‛கனடாவில் நாங்கள் வெளிப்படை தன்மையை விரும்புகிறோம். இதனை நம்பி வருகிறது. இதனை தான் தொடர்ந்து செய்வோம்'' என கூறினார்.இது ஜி ஜின்பிங்கிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் ஜஸ்ட்டின் ட்ரூடோவிடம் கைக்குலுக்கிவிட்டு அங்கிருந்து சென்றார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

முந்தைய மோதல் போக்கு

முந்தைய மோதல் போக்கு

சீனா-கனடா இடையே ஏற்கனவே மோதல் போக்கு உள்ளது. கனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலின்போது சீனா தலையிட முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் கனடாவில் உள்ள சீனாவின் ஆதரவாளர்களுக்கு ரகசியமாக நிதி வழங்கப்படுவதாகவும், கனடாவை சீனா உளவு பார்ப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கனடா சார்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நேற்றை சந்திப்பு இருநாட்டு தலைவர்கள் இடையேவும் இனிமையானதாக இல்லை.

கனடா பிரதமர் விளக்கம்

கனடா பிரதமர் விளக்கம்

இதையடுத்து பத்திரிகையாளர்களை ஜஸ்ட்டின் ரூட்டோ கூறுகையில், ‛‛சீனாவுடன் ஒவ்வொரு உரையாடலும் எளிமையானதாக இருக்காது. இருப்பினும் இந்த பேச்சுவார்த்தையை ஆக்கப்பூர்வமாகவும் நேரடியாகவும் மேற்கொள்ள வேண்டும் என்பதில் கனடா உள்ளது. மேலும் கனடா மக்களுக்கு மதிப்பளித்து மனித உரிமைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியதும் அவசியமான ஒன்றாக உள்ளது'' என்றார்.

English summary
Chinese President Xi Jinping lashed out at Canadian Prime Minister Justin Trudeau in front of cameras at the G20 summit in Indonesia, causing shock. Now the related video is spreading rapidly on the websites.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X