எல்லை மீறும் சீனா? பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில்... 'மேட் இன் சீனா' ரகசிய கேமராக்கள் கண்டெடுப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மேல் சபையில் வாக்கெடுப்பு நடைபெறும் இடத்திற்கு அருகில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ரகசிய கேமராக்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் நமக்கும் பெரும்பாலான நேரங்களில் சுமுகமான உறவு இருந்ததில்லை. இந்தியா எல்லையில் பயங்கரவாதிகளை அனுப்புவது, துப்பாக்கிச் சூடு எனப் பாகிஸ்தான் அத்துமீறிக்கொண்டே இருக்கும்.
அதேநேரம் பாகிஸ்தானுக்கும் அதன் மற்றொரு அண்டை நாடான சீனாவுக்கும் நல்ல உறவு உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் பல்வேறு திட்டங்களில் சீனா முதலீடு செய்துள்ளது.

பாகிஸ்தான் மேல்சபை
ஆனால், தற்போது பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் மேல்சபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் 48 புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நேற்று பதிவு ஏற்றுக்கொண்டனர். அப்போது மேல் சபையின் சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது.

சபாநாயகர் தேர்தல்
இதில் பிரதமர் இம்ரான் கானின் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி சாதிக் சஞ்சிராணி என்பவரை சபாநாயகர் பதவிக்கு முன்னிறுத்தியது. அவருக்கு எதிராக முன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானியை எதிர்க்கட்சிகள் சபாநாயகர் பதவிக்குக் களமிறக்கியது. இது தொடர்பாக வாக்குப்பதிவு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு உறுப்பினராகச் சென்று தங்கள் வாக்குகளை அளித்து வந்தனர்.

ரகசிய கேமராக்கள்
அப்போது, சில எம்பிகள் வாக்களிக்கும் இடத்திற்கு அருகில் சீன ரகசிய கேமராக்கள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டினர். மேலும், இது தொடர்பான புகைப்படங்களையும் அவர்கள் இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். ஆனால், இம்ரான் கான் தலைமையிலான ஆளும் கட்சியினர், ரகசிய கேமராக்களுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் எதிர்க்கட்சிகள்தான் இந்த கேமராக்களை வைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினர்.

மேட் இன் சீனா
இதையடுத்து மதியம் வரை நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் நடத்தப்பட்ட தேர்தலில் இம்ரான் கான் தரப்பில் முன்னிறுத்தப்பட்ட சாதிக் சஞ்சிராணி சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அந்த கேமராக்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்பதால் அதில், மேட் இன் சீனா என்று இருந்தாலும், அங்கு பொருத்தப்பட்ட கேமராக்களுக்கும் சீனாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றே தெரிகிறது. இதுவரை சீனா தரப்பில் இதற்கு எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை,
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications