வண்டியை நிறுத்துய்யா.. நான் ஆக்சிடன்ட் பண்ணனும்.. ஆத்தாடி.. பெரிய ராவடி பொம்பளையா இருக்கும் போலயே

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: தமிழ் திரைப்படத்தில் வடிவேல் காமெடியில் வருவது போல் போலியாக சீன பெண் ஒருவர் விபத்தை ஏற்படுத்திவிட்டு இழப்பீடு தொகை கேட்டு வாக்குவாதம் செய்யும் காட்சிகள் அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.

தென்கிழக்கு சீனாவை சேர்ந்தவர் டாங். இவர் கடந்த 4-ஆம் தேதி சைக்கிளில் செல்லும் போது லாரி மோதியதில் விபத்தில் சிக்கினார். அப்போது விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரிடம் டாங் நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.

இதை கொடுப்பதற்கு டிரைவர் மறுத்துள்ளார். அப்போது போலீஸார் அங்கு வரவழைக்கப்படுகின்றனர். அப்போது டாங் வலியால் துடிதுடிக்கிறார். எனினும் லாரி டிரைவரோ தான் விபத்தை ஏற்படுத்தவே இல்லை என்கிறார். அது போல் டாங்கும் காயமடைந்தது போல் தெரியவில்லை.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அங்கு பதிவாகியிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர். அப்போது அந்த வீடியோ காட்சிகளை பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

லாரி மீது உரசல்

லாரி மீது உரசல்

ஒரு லாரி வரும் போது டாங் தனது சைக்கிளை வேகமாக தூக்கிக் கொண்டு வருகிறார். அப்போது வளைவின்போது அவராகவே மோதி சைக்கிளால் லாரியை உரசுகிறார். அதில் சைக்கிள் கீழே விழுகிறது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அப்போது லாரி நிற்கும் சமயத்தில் டாங் ஓடி போய் முன்பக்க டயரில் படுத்துக் கொள்கிறார். உடனே அய்யய்யோ அம்மா என வலியால் துடிப்பது போல் நடிக்கிறார். இதை அவ்வழியே போவோர் வருவோர் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

தமிழ்ப் படம்

தமிழ்ப் படம்

இதையடுத்து அந்த பெண்ணை போலீஸார் எச்சரித்து அனுப்புகின்றனர். இது போல் கருப்பசாமி குத்தகைதாரர் என்ற ஒரு திரைப்படத்தில் வடிவேல் ஒரு தனி குரூப்பையே வைத்திருப்பார். யாராவது ஏமாளியாக வருபவர்களின் வாகனத்தின் முன் ஓடிபோய் படுத்துக் கொண்டு விபத்து ஏற்படுத்திவிடுவது போல் நடிப்பது இழப்பீடு பறிக்கும்படியாக காட்சிகள் அமையும்.

செம காமெடி

செம காமெடி

அவ்வாறு பெறப்பட்ட இழப்பீட்டு தொகையில் வடிவேல் எடுத்துக் கொண்டது போக மீதமுள்ள சொற்ப தொகை அந்த குரூப்பில் இருப்பவர்களுக்கு பிரித்துக் கொடுப்பார். அப்போது ஒரு பெண், என்னய்யா வர வர தொகை குறையுது, அடுத்தமுறை நாங்கள் பெரிசா எதிர்பார்க்கிறோம் என்பார். அப்போ வண்டியும் பெரிசா இருக்கும் பரவையில்லை என வடிவேல் கேட்க அதற்கு என்னா வண்டி என அந்த பெண் கேட்க, ஆங்... ரயில் என்று வடிவேல் சொல்லி முடிப்பதற்குள் அனைவரும் ஓட்டம் பிடிப்பர். பார்க்கவே செம காமெடியா இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+