விருந்தாளிகள் வரலாம்.. ஆனா.. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்த பெல்ஜியம்!
பிரஸ்சல்ஸ்: பெல்ஜியம் நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகை கிறிஸ்துமஸ் திருவிழாவாகும். இயேசு கிறிஸ்து உலகில் அவதரித்த நன்நாளை உலகில் உள்ள கிறிஸ்துவ மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்தே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்ட தொடங்கவிடும். சாண்டா கிளாஸ் பொம்மைகள், தொப்பிகள் என விதவிதமான பொருட்கள் சந்தைக்கு வந்துவிடும். கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையையொட்டி தங்களுடைய உறவினர்கள் வீடுகளுக்கு சென்று மக்கள் குதூகழிப்பர்.

கடும் கட்டுப்பாடுகள்
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக நிறைய நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில், அதிக மக்கள் கூடுவதற்கு மிகுந்த கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவருக்கே அனுமதி
அதன்படி பெல்ஜியத்தில் உள்ளவர்கள் கிறிஸ்துமஸ் விருந்துக்கு நான்கு பேரை மட்டுமே அழைக்க முடியும். அவர்கள் அனைவரும் வீட்டிற்குள் செல்ல முடியாது. அதிகாரிகள் அனுமதிக்கும் ஒருவர் மட்டுமே வீட்டிற்குள் செல்ல முடியும்.

நோ மீன்ஸ் நோ
ஒரு விருந்தினர் மட்டும் நெருங்கிய தொடர்பாக தேர்வு செய்யப்பட்டு வீட்டிற்குள் அனுமதிக்கப்படுவார். அவர் மட்டுமே கழிவறையை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார். அதேசமயம், மற்ற விருந்தினர்களுக்கு எந்த காரணத்திற்காகவும் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. எனவே, ஆத்திர அவசரம் என்றால்கூட அவர்கள் தங்கள் வீட்டிற்கு தான் செல்ல வேண்டியிருக்கும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இப்படியெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்தால் எப்படி பண்டிகைகளை சந்தோசமாகக் கொண்டாட முடியும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்தாலும், கொரோனா பரவலைத் தடுக்கவே இப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதால் அந்நாட்டு மக்கள் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications