ஆங்கிலேயர் ஆட்சியில் விஷவாயு செலுத்தி வடகிழக்கு இந்தியர்களை கொல்லத் திட்டமிட்ட சர்ச்சில்
லண்டன்: இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்தபோது வடகிழக்கு பகுதியில் உள்ள பழங்குடியன மக்களை ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி கொன்றுவிட முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்ட்ன் சர்ச்சில் விரும்பியது தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல வரலாற்று புத்தக ஆசிரியர் கைல்ஸ் மில்டன் ஸ்காட்லாந்தின் விக்டவுனில் நடைபெற்று வரும் விக்டவுன் புத்தக விழாவில் கலந்து கொண்டு தனது புதிய புத்தகமான ரஷ்யன் ரூலெட் குறித்து விளம்பரம் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

இந்தியர்களை கொல்ல சதி
முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதில் மிகவும் விருப்பமாக இருந்தார். 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் தொல்லை கொடுத்து வந்த பழங்குடியின
மக்களை ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி கொல்ல சர்ச்சில் விரும்பினார்.

மெமோ
வடகிழக்கு இந்திய பழங்குடியின மக்களை விஷவாயு செலுத்தி கொல்வது குறித்த மெமோவையும் சர்ச்சில் இந்திய அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். வடகிழக்கு பகுதியில் உள்ளவர்கள் மிகவும் தொல்லை கொடுக்கிறார்கள். அவர்களை விஷவாயு செலுத்தி கொன்றுவிடுவோம் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார். இந்த மெமோவை அனுப்பியபோது சர்ச்சில் இங்கிலாந்து பிரதமர் கிடையாது.

எம் டிவைஸ்
இங்கிலாந்து நாட்டவர் பரம ரகசியமாக எம் டிவைஸ் என்ற பயங்கர ரசாயன ஆயுதத்தை வில்ட்ஷயரில் உள்ள போர்டன் லபாரடரீஸில் தயாரித்தனர். இதுவரை தயாரிக்கப்பட்ட ரசாயன ஆயுதங்களிலேயே இது தான் மிகவும் மோசமானது. அதை தயாரித்தார்கள் ஆனால் பயன்படுத்தவில்லை. இந்த எம் டிவஸை ரஷ்யாவின் போல்ஷெவிக்ஸுக்கு எதிராக பயன்படுத்த வேண்டும் என்பது தான் சர்ச்சிலின் திட்டம்.

சர்ச்சிலின் மறுபக்கம்
சர்ச்சில் ஒரு சிறந்த பிரித்தானியர். ஆனால் அவரின் குணத்திற்கு மறுபக்கமும் உண்டு. அவர் ரசாயன ஆயுத பயன்பாட்டை ஊக்குவித்தவர் என்றார் மில்டன்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications