லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை!
லண்டன்: தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஒரு வார பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில் இன்று அவர் லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியுள்ளார்.
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஒரு வார பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சென்று இருக்கிறார் முதலமைச்சர். கடந்த 30 ஆம் தேதி ஜெர்மனி புறப்பட்டு சென்ற அவர், அங்கு 'டிஎன் ரைசிங் ஜெர்மனி' என்கிற பெயரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றிருந்தார். இந்த மாநாட்டின் மூலம் ரூ. 7,020 கோடி மதிப்பில் 26 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதனை தொடர்ந்து கடந்த இரண்டாம் தேதி ஜெர்மன் பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து சென்றடைந்தார் முதலமைச்சர். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த பயணம் குறித்து தனது எக்ஸ் பதிவில் அவர் பதிவிட்டு இருப்பதாவது,"தமிழகத்தின் வளர்ச்சி பயணத்திற்கு ஐரோப்பிய பயணம் துணை நிற்கும். தமிழ் உறவுகள் அளித்த அன்பும் ஜெர்மனியில் ஈர்த்த முதலீடுகளும் கொடுத்துள்ள ஊக்கத்துடன் இங்கிலாந்து வந்தடைந்திருக்கிறேன். இந்த பயண அனுபவங்களை உடன்பிறப்புகளுடன் பகிர்கிறேன். இங்கிலாந்தில் கால் பதித்தேன். தொலைதூர கரைகளை கடந்து சென்றும் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை அளித்தது எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு. அங்கு உள்ளவர்களால் அன்பும் பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன்" என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியிருக்கிறார். அதாவது 'பெரியாரின் மரபு மற்றும் திராவிட சிந்தனையில் ஆழமான தாக்கம்' குறித்து முதலமைச்சர் சிறப்புரையாற்றியிருக்கிறார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications